Job Fair: வேலை தேடுவோருக்கு ஜாக்பாட்.! 2 மாவட்டத்துல நடக்குது வேலை வாய்ப்பு முகாம்.! மிஸ் பண்ணாதீங்க!

Published : Nov 19, 2025, 07:36 AM IST

நவம்பர் 21, 2025 அன்று தென்காசி மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளன. 8-ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு வரை முடித்தவர்கள் அனைவரும் இந்த முகாமில் கலந்துகொண்டு வேலைவாய்ப்பைப் பெறலாம். 

PREV
14
நல்ல வேலை, கைநிறைய சம்பளம்

தமிழகத்தின் தென்காசி மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்கள் சார்பில், வரும் 21.11.2025 (வெள்ளிக்கிழமை) அன்று சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. வேலை தேடுகிற இளைஞர்கள், பெண்கள், பட்டதாரிகள், டிப்ளமோ/ஐ.டி.ஐ மாணவர்கள் வரை அனைவருக்கும் இது ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது.

24
தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு முகாம்

தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் காலை 10.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 8-ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு வரை கல்வித்தகுதி உள்ளோர் கலந்து கொள்ளலாம். ஐ.டி.ஐ, டிப்ளமோ தகுதி உள்ளோரும் தகுதி பெறுவர்

இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் வேலைநாடுநர்கள்  www.tnprivatejobs.tn.gov.in இணையதளத்தில் Candidate Login மூலம் பதிவு செய்ய வேண்டும்.  நிறுவனங்கள் Employer Loginல் பதிவு செய்ய வேண்டும்

மேலும் விவரங்களுக்கு: 9597495097 / 04633-213179 📧 deotksjobfair@gmail.com

முக்கிய குறிப்பு: தனியார் வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணிநியமனம் பெற்றாலும், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு ரத்து செய்யப்படாது.

இடம்: District Employment & Career Guidance Centre – Tenkasi Landmark: குத்துக்கல்வளசை, எபெனிசர் டைல்ஸ் ஷோரூம் அருகில், KFC பின் புறம்

34
கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு முகாம்

கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், ஒவ்வொரு மாதமும் மூன்றாம் வெள்ளிக்கிழமையில் நடைபெறும்  தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இந்த மாதம் 21.11.2025 அன்று நடைபெற உள்ளது. 20 தனியார் நிறுவனங்கள் பங்கேற்கின்றன. பகுதிநேர வேலைகளும் வழங்கப்பட உள்ளன. இளைஞர்கள் அதிகமான எண்ணிக்கையில் கலந்து கொண்டு வேலைவாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது

மேலும் விவரங்களுக்கு:  8807204332 / 04151-295422

இடம்: District Employment Office, Kallakurichi Landmark: Neppal Street, Kallakurichi

44
உங்கள் தொழில் வாழ்க்கைக்கான புதிய தொடக்கம்

இரண்டு மாவட்டங்களிலும் ஒரே நாளில் நடைபெறும் இந்த வேலைவாய்ப்பு முகாம்கள், திறமையையும் தகுதிகளையும் வெளிக்காட்ட சிறந்த வாய்ப்பாகும். தொழில் தேடும் அனைவரும் இந்த முகாம்களில் கலந்து கொண்டு நேரடியாக நிறுவனங்களை சந்தித்து வேலைவாய்ப்பைப் பெறுங்கள். இது உங்கள் தொழில் வாழ்க்கைக்கான புதிய தொடக்கம் ஆகலாம்!

Read more Photos on
click me!

Recommended Stories