State Bank Of India: எஸ்பிஐ வங்கியில் 800 காலி பணியிடங்கள்! மாதம் ரூ.93,960 சம்பளம்! விண்ணப்பிப்பது எப்படி?

Published : Sep 26, 2024, 07:53 AM IST

State Bank Of India Recruitment: ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் டெக்னிக்கல் பிரிவில் 800 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. துணை மேலாளர், உதவி மேலாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம். 

PREV
15
State Bank Of India: எஸ்பிஐ வங்கியில் 800 காலி பணியிடங்கள்! மாதம் ரூ.93,960 சம்பளம்! விண்ணப்பிப்பது எப்படி?

ஸ்டேட் வங்கி இந்தியா வெளிநாடுகளில் பரந்துள்ள தன் கிளைகள் மூலம் பல்வகை வங்கிச்சேவைகளை வழங்கி வருகிறது. 16,000 கிளைகள் கொண்டுள்ள ஸ்டேட் வங்கிக் குழுமம் இந்தியாவிலேயே கூடுதலான கிளைகள் கொண்டுள்ள வங்கியாகும். இந்த வங்கியின் மூலமாக அதிகளவில் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.  பொதுத்துறை வங்கியான ஸ்டேட் வங்கி, இந்தியாவிலேயே பெரிய வங்கி என்பது மட்டுமல்ல, அதிக வாடிக்கையாளர்களை கொண்ட வங்கியும். வங்கி வேலைக்கு ஆசைப்படும் பெரும்பாலானோரின் முதல் தேர்வாக இருப்பதும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாதான்.

25

இந்நிலையில், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் டெக்னிக்கல் பிரிவில் காலியாக உள்ள 800 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இவை அனைத்தும் டெக்னிக்கல் பணிகளுக்கான காலிப்பணியிடங்களாகும். இதற்கான கல்வி தகுதி சம்பளம் விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. துணை மேலாளர் (சிஸ்டம்) மற்றும் உதவி மேலாளர் (சிஸ்டம்) என இரு பதவிகளின் கீழ் 798 பணியிடங்களும், இதுதவிர, துணைத் தலைவர் (IT Risk) மற்றும் உதவி துணைத் தலைவர் (IT Risk) ஆகிய இரு பிரிவுகளில் தலா ஒரு பணியிடங்கள் என இரண்டு பணியிடங்களும் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன.

35

இந்த பதவிகளுக்கான கல்வித்தகுதி அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனங்களில் பி.இ, பி.டெக், எம்சிஏ, எம்.டெக், எம்.எஸ்.சி ஆகிய பாடங்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த பணிகளுக்கான வயது வரம்பு 25 வயது முதல் 35 வயது வரை இருக்க வேண்டும். குறிப்பாக விண்ணப்பிக்கும் பணியைப் பொறுத்து 2-5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

45

துணை மேலாளர் (சிஸ்டம்), துணைத் தலைவர் (IT Risk) உதவி துணைத் தலைவர் (IT Risk), ஆகிய பணிகளுக்கான வயது வரம்பு 25 வயது முதல் 35 வயது இருக்க வேண்டும். உதவி மேலாளர் (சிஸ்டம்) பணிக்கு மட்டும் வயது வரம்பு 21 - 30க்குள் இருக்க வேண்டும். உதவி மேலாளர் பதவிக்கு மட்டும் எழுத்து தேர்வும், துணை மேலாளர் பதவிக்கு நேர்முகத் தேர்வு மூலமாகவும் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 

55

அக்டோபர் 4ம் தேதிக்குள் sbi.co.in/web/careers என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். துணை மேலாளர் பணியிடங்களுக்கு ஊதியமாக ரூ.64,820 - ரூ.93,960 வரை மாதம் கிடைக்கும். அதேநேரம், உதவி மேலாளர் பணியிடங்களுக்கு ஊதியமாக ரூ.48,480 - ரூ.85,920 வரை மாதம் கிடைக்கும்.  இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் அக்டோபர் மாதம் 4ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இந்த பணிக்கு விண்ணப்பிக்க பொது, ஒபிசி மற்றும் EWS பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் ரூ.750 கட்டணம் செலுத்த வேண்டும். அதே சமயம் எஸ்.சி, எஸ்.டி உள்ளிட்ட பிரிவினருக்கு இந்த கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://sbi.co.in/web/careers என்ற அதிகாரப்பூர்வ SBI இணையதளத்தில் முழு விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. 

Read more Photos on
click me!

Recommended Stories