Job Fair: படித்து விட்டு வேலை தேடும் இளைஞரா நீங்கள்? அப்போ இந்த சூப்பர் செய்தி உங்களுக்குதான்!

Published : Sep 21, 2024, 11:03 AM IST

Job Fair: காஞ்சிபுரத்தில் நடைபெறும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 150க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கின்றன. 10, 12ம் வகுப்பு, டிப்ளமோ, பட்டதாரிகள் வரை கலந்து கொள்ளலாம்.

PREV
15
Job Fair: படித்து விட்டு வேலை தேடும் இளைஞரா நீங்கள்?  அப்போ இந்த சூப்பர் செய்தி உங்களுக்குதான்!
tamilnadu Government

இன்றைய இளைஞர்கள் பலர் அரசு வேலையில் சேருவதிலேயே அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். மத்திய மற்றும் மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் சேரவும் ஆர்வம் காட்டுகிறார்கள். ஆனால் ஆயிரம் பேர் வேலைக்கு 10 லட்சம் முதல் 20 லட்சம் பேர் போட்டியிடுவார்கள். எனவே அனைவருக்கும் அரசு வேலை கிடைப்பது சாத்தியமே இல்லை. இதனால் அரசு வேலை என்பது இளைஞரின் கனவாகவே உள்ளது. இன்னும் சில இளைஞர்கள் வேலை கிடைக்காமல் மனவேதனை இருந்து வருபவர்களுக்கு வேலை வாய்ப்பை உண்டாக்கும் விதத்தில் அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தனியார் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு மாவட்டம் தோறும் வேலைவாய்பு முகாம்களை அரசே ஏற்பாடு செய்து வருகிறது. இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் தனியார் வேலை வாய்ப்பு தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

25
Kanchipuram

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்:

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் மூலம் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் மாதந்தோறும் இரண்டாவது அல்லது மூன்றாவது வெள்ளிக்கிழமை (அரசு விடுமுறை நாள் தவிர்த்து) அன்று சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்களும். ஆண்டிற்கு இரண்டு பெரிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்களையும் நடத்த ஆணையிடப்பட்டுள்ளது.

35
Employment camp

45
Companies

பங்குபெறும் நிறுவனங்கள் விவரம்

இந்த முகாமில் ASHOK LEYLAND, HYUNDAI, SUTHERLAND, FLEXTRONICS, TVS & MOTHERSON போன்ற 150-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்துகொண்டு தங்களுக்கான மனிதவள தேவைக்கு நேர்முக தேர்வினை நடத்த உள்ளனர்.

55
Educational Qualification

வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்ற கல்வி தகுதி

இந்த வேலை வாய்ப்பு முகாமில் பட்டதாரிகள், டிப்ளமோ, ஐ.டி.ஐ. 12வது மற்றும் 10ம் வகுப்பு படித்தவர்கள் போன்றவர்களை தேர்ந்தெடுக்க உள்ளனர். 

தேவையான ஆவணங்கள்:

எனவே, 18 முதல் 35 வயது வரை உள்ள வேலை நாடுநர்கள் தங்களுடைய கல்வி சான்றிதழ்கள், பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்துடன் இன்று காலை 10.00 மணிக்கு காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரிக்கு நேரில் வந்து வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Read more Photos on
click me!

Recommended Stories