SSC Job Vacancy: 40,000 மத்திய அரசுப் பணியிடங்கள் காலி! அப்ளை செய்வது எப்படி?

First Published Sep 19, 2024, 10:24 AM IST

SSC Job Vacancy: மத்திய ஆயுதக் காவல் படையில் 40,000 காலி பணியிடங்களை நிரப்பும் பொருட்டு, பணியாளர் தேர்வு ஆணையம் (எஸ்எஸ்சி) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 - 23 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Staff Selection Commission

எப்படியாவது அரசு வேலைக்கு சென்றுவிட்டால் லைஃப் செட்டில்டு என்பதால் போட்டா போட்டிக்கொண்டு இளைஞர்கள் தேர்வு எழுதி வருகின்றனர். தமிழகத்தில் அரசு பணியாளர் தேர்வு வாரியம் போல மத்திய அரசில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப எஸ்.எஸ்.சி எனப்படும் ஸ்டாப் செலக்சன் கமிஷன் தேர்வு மூலம் அரசு பணிக்கு ஆட்களை தேர்வு செய்து வருகிறது. 

Staff Selection Commission job

இந்நிலையில், பணியாளர் தேர்வு ஆணையம் (Staff Selection Commission) என்பது இந்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகள் மற்றும் துணை அலுவலகங்கள் மற்றும் ஏஜென்சிகளில் உள்ள பல்வேறு பதவிகளுக்கு பணியாளர்களை பணியமர்த்துவதற்காக இந்திய அரசின் கீழ் உள்ள ஒரு அமைப்பாகும். இந்த ஆணையம் பணியாளர் மற்றும் பயிற்சித் துறையின் (DoPT) இணைக்கப்பட்ட அலுவலகமாகும், இதில் தலைவர், இரண்டு உறுப்பினர்கள் மற்றும் தேர்வுக் கட்டுப்பாட்டாளர் மற்றும் செயலாளர் ஆகியோர் உள்ளனர். அவரது பதவி இந்திய அரசின் கூடுதல் செயலாளர் நிலைக்கு சமமானது.

Latest Videos


Special Security Force

இந்நிலையில் அஸ்ஸாம் ரைபிள்ஸ் தேர்வில் மத்திய ஆயுதக் காவல் படைகளில் (சிஏபிஎஃப்) கான்ஸ்டபிள் (பொது வேலை), எஸ்எஸ்எஃப் மற்றும் ரைஃபிள் மேன் (பொது வேலை) உள்ளிட்ட பணிகளுக்கான அறிவிப்பை எஸ்எஸ்சி எனப்படும் பணியாளர் தேர்வு ஆணையம் வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: Tamilnadu Government School: பள்ளிகளுக்கு முக்கிய உத்தரவு! செப்டம்பர் 27ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு!

40,000 காலி பணியிடங்கள்

பிஎஸ்எஃப் எனப்படும் எல்லை பாதுகாப்புப் படையில் ஆண்களுக்கு 13,306 காலி இடங்களும், பெண்களுக்கு 2348 இடங்களும் என மொத்தம் 15,654 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதேபோல, சிஐஎஸ்எஃப் பிரிவில், 7,145 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. சிஆர்பிஎஃப் பிரிவில் 11,541 காலி இடங்களும் எஸ்எஸ்பி பிரிவில் 819 காலி இடங்களும்,  ITBP துறையில் 3017 இடங்களும் AR துறையில் 1248 இடங்களும் SSF பிரிவில் 35 இடங்களும் என்சிபி-ல் 22 இடங்களும் உள்ளன. மொத்தமாக 39,481 இடங்களுக்கு தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
 

Staff Selection Commission

வயது வரம்பு:

18 - 23 வயதுடையவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.  மேலும் ஓபிசி மற்றும் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு வயதில் தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
எஸ்சி/ எஸ்டி தேர்வர்களுக்கு 5 ஆண்டுகளும் ஓபிசி தேர்வர்களுக்கு 3 ஆண்டுகளும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி:

இதற்காக கல்வி தகுதி 10ம் வகுப்பு படித்திருந்தாலே  இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான போட்டித் தேர்வு 2025ம் ஆண்டு ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் நடத்தப்படலாம்.

தேர்வு செய்யும் முறை:

கணினி வழியில் இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது. தமிழ், அசாமி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம், கொங்கனி, மலையாளம், மணிப்பூரி, மராத்தி, ஒடியா, பஞ்சாபி, தெலுங்கு மற்றும் உருது உள்ளிட்ட 13 மொழிகளில் நடைபெறுகிறது. தொடர்ந்து உடல் தகுதித் தேர்வு, மருத்துவத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும். 

மாத ஊதியம்:

Level -1 வகை பணிகளுக்கு  ரூ.18,000 முதல் ரூ.56,900 வரையும், Level - 3 வகை பணிகளுக்கு ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை

Application

விண்ணப்பிக்க கடைசி நாள்:

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க அக்டோபர் 14ஆம் தேதி வரை கடைசி நாளாகும். அக்டோபர் 15ஆம் தேதி வரை விண்ணப்ப கட்டணத்தைச் செலுத்தலாம்.  இந்த பணியிடங்கள் மற்றும் விண்ணப்பங்கள் தேர்வு தொடர்பாக அறிந்து கொள்ள இணையதள முகவரியும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 

click me!