கால் காசு வருமானம் என்றாலும் அரசு வருமானமாக இருக்கே வேண்டும், இந்த பழமொழிக்கு இப்போதும் மவுசு உண்டு. என்னதான் தனியார் துறையில் அதிக சம்பளத்தில் வேலை செய்தாலும், அரசு பணிக்கு எப்போதுமே ஒரு தனி மவுசு உண்டு. இன்றைய காலகட்டத்தில் பென்ஷன் என்ற ஸ்கிம் இல்லை என்றாலும், அரசு வேலைக்காக போட்டியிடும் இளைஞர்களின் அளவு கொஞ்சம் கூட குறையவில்லை என்றே கூறலாம். சரி இந்த பதிவில், இந்தியாவிலேயே அதிக சம்பளம் கிடைக்கும் சில அரசு பணிகளை பற்றி பார்க்கலாம்.
ரிசர்வ் வங்கியில் கிரேட் B பணிகள்
குறிப்பிடத்தக்க பொறுப்புகளுடன் ஒரு மதிப்புமிக்க பணியை வழங்குகிறது இந்த வேலை. ஒவ்வொரு ஆண்டும், ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா, நாடு முழுவதும் உள்ள அதன் பல கிளைகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்களைத் தேர்வு செய்வதற்காக ஆர்பிஐ கிரேடு பி தேர்வை நடத்துகிறது. இந்தியாவில் நடத்தப்படும் மிக மிக கடினமான வாங்கி தேர்வுகளில் இதுவும் ஒன்று.
எஸ்பிஐ வங்கியில் மெகா வேலை வாய்ப்பு ஆஃபர்: 1511 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியீடு