டிடிஆர், ஸ்டேஷன் மாஸ்டராக ஆக வேண்டுமா.? ரயில்வேயில் கொட்டிக்கிடக்கும் 8113 வாய்ப்பு- உடனே விண்ணப்பிக்க அழைப்பு

First Published | Sep 16, 2024, 8:06 AM IST

இந்திய ரயில்வேயில் ஸ்டேசன் மாஸ்டர், டிக்கெட் சூப்பர்வைசர் உள்ளிட்ட 8113 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளம் ரூ.29,200 முதல் ரூ.35,400 வரை.

படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு

பள்ளிக்கல்வி முதல் உயர்கல்வி வரை ஆண்டு தோறும் லட்சக்கணக்கான மாணவர்கள் படிப்பு முடித்து வெளியே வருகிறார்கள். பல லட்சம் பேருக்கும் ஒரே நேரத்தில் மத்திய மற்றும் மாநில அரசு பணியில் வேலை கிடைப்பது என்பது சாதாரண விஷயம் இல்லை. அந்த வகையில் தனியார் நிறுவனத்தில் வேலை வாய்ப்பானது கொட்டிக்கிடக்கிறது.

கை நிறைய சம்பளமும் கிடைப்பதால் இன்றைய கால இளைஞர்கள் தனியார் துறையில் இணையவே அதிகமாக விரும்புகிறார்கள். அந்த அளவிற்கு ஐடி துறையானது பரந்து விரிந்துள்ளது. சிறப்பாக பணியாற்றினால் அமெரிக்கா, கனடா, லண்டன் என சம்பள உயர்வோடு வெளிநாட்டிற்கு செல்ல வாய்ப்பும் உருவாக்கப்பட்டு வருகிறது.
 

ரயில்வே துறையில் வேலை

இது ஒரு பக்கம் என்றால் மற்றொரு பக்கம் மாநில அரசில் காலியாக உள்ள இடங்களை அரசு பணியாளர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. இன்னும் ஒரு வருட காலத்தில் 75ஆயிரம் பணியிடங்களி நிரப்பப்படும் என தமிழக அரசும் அறிவித்துள்ளது. இதற்கான தேர்வுகளும் அடுத்தடுத்து வெளியிடப்பட்டு வருகிறது.

இதே போன்று மத்திய அரசின் பணிக்கான அழைப்பும் தினந்தோறும் வெளியாகிகொண்டுள்ளது. இதில் முக்கியமானது ரயில்வே துறையாகும் மத்திய அரசு துறைகளிலையே அதிக ஊழியர்கள் கொண்ட துறையாக ரயில்வே துறை உள்ளது. இந்த துறையில் 10 வது படித்தவர்கள் தொடங்கி பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது டிகிரி முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்புக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
 

Tap to resize

8113 காலி பணியிடங்கள் நிரப்புதல்

அதன் படி இந்திய ரயில்வேயில் ஸ்டேசன் மாஸ்டர், டிக்கெட் சூப்பர்வைசர், சரக்கு ரயில் மேலாளர், டிக்கெட் கிளார்க், எழுத்தர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் மொத்தம் 8 ஆயிரத்து 113 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இதில் 3144 சரக்கு ரயில் மேலாளர், 1736 டிக்கெட் மேற்பார்வையாளர், 1507 தட்டச்சர், 994 ஸ்டேஷன் மாஸ்டர்  மற்றும் 732 மூத்த எழுத்தர் பணியிடங்கள் ரயில்வே தேர்வு வாரியத்தால்  ஆல் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தகுதி

பட்டப்படிப்பு கட்டாயம்

இந்த பதவியிடங்களுக்கு தகுதியுள்ள விண்ணப்பதாரர்களின் வயது 18 முதல் 36 வயதுக்குள் இருக்க வேண்டும். 

மாத சம்பளம்

 மாதம் ரூ.29,200 முதல் ரூ.35,400 வரை சம்பளம் 
 

RRB

விண்ணப்பிக்க கடைசி நாள் 

ரயில்வையில் காலியாக உள்ள 8113 இடங்களுக்காக விண்ணப்பிப்பவர்கள், விண்ணப்பக் கட்டணமாக 500 ரூபாய் செலுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.  எஸ்சி, எஸ்டி, பெண்கள், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் 250 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பிக்க முடியும் எனவும் கூறப்பட்டுள்ளது. ரயில்வே துறை வேலை வாய்ப்பு தொடர்பாக அறிய rrbapply.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம் என்று யில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் அக்டோபர் 13ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. 

Latest Videos

click me!