ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்வித் திட்டம்
ITEP என்பது நான்கு ஆண்டு இளங்கலை பாட திட்டமாகும், இது ஆசிரியர் கல்வியை பல்துறை இளங்கலைக் கல்வியுடன் இணைக்கும் ஒரு பாலம் என்றே கூறலாம். இந்தத் திட்டம் தேசிய கல்விக் கொள்கைக்கு (NEP) உட்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்வித் திட்டம் மூலம், ஒருவரால் இரண்டு படிப்புகளை ஒரே நேரத்தில் படித்து முடிக்க முடியும். அதாவது அவரால் இளங்கலை படிப்பு படிக்கும் போதே, கற்பித்தல் பயிற்சியும் பெற முடியும். அதாவது நீங்கள் உங்கள் பள்ளி படிப்பை முடித்தபிறகு வருடத்தை வீணடிக்காமல், நீங்கள் பயிலும் பி.எஸ்சி, பி.காம், பி.ஏ போன்ற வழக்கமான பட்டப்படிப்புகளுடன் இணைந்து பி.எட் படிப்பை முடிக்க முடியும், இதன் மூலம் நீங்கள் 1 வருடத்தை சேமிக்கவும் முடியும்.
அதே சமயம் இந்த ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்வித் திட்டத்தில் இணைய, நீங்கள் அரசால் நடத்தப்படும் தேசிய பொது நுழைவுத் தேர்வினை (NCET) எழுத வேண்டும். அதில் நீங்கள் வெற்றி பெறும் பட்சத்தில், பி.எட் படிக்காமலேயே நீங்கள் படித்த டிகிரியை வைத்து உங்களால் அரசு பள்ளிகளில் பணியாற்றி முடியும். ஆனால் முதன்மை நிலை எனப்படும் பிரைமரி பள்ளியில் மட்டுமே உங்களால் ஆசிரியராக பணியாற்ற முடியும். உயர் கல்வியில் ஆசிரியராக பணியாற்ற கட்டாயம் பி.எட் முடித்திருக்க வேண்டும்.