இளைஞர்களுக்கு பொன்னான வாய்ப்பு: 1,57,000 சம்பளத்தில் ஐடிபிஐ வங்கியில் வேலை வாய்ப்பு

Published : Sep 13, 2024, 11:37 PM IST

ஐடிபிஐ வங்கியில் காலியாக உள்ள வங்கி மேலாளர் மற்றும் உதவி மேலாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

PREV
15
இளைஞர்களுக்கு பொன்னான வாய்ப்பு: 1,57,000 சம்பளத்தில் ஐடிபிஐ வங்கியில் வேலை வாய்ப்பு
Bank Job

நாட்டில் படித்த இளைஞர்கள் பலரும் ஐடி துறைக்கு நிகராக வங்கி துறையை தேர்வு செய்வதிலேயே ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்காக பலரும் சிறப்பு வகுப்புகளுக்குச் சென்று தங்களது அறிவை மேம்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், அப்படிப்பட்ட இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் விதமாக இந்திய தொழில் மேம்பாட்டு வங்கியான ஐடிபிஐ வங்கியில் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

25
Bank Job

வங்கியில் காலியாக உள்ள உதவி பொதுமேலாளர், மேலாளர் பணியிடங்களை நிரப்புவதற்கன அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், ஆர்வமும் உள்ள இளைஞர்களிடம் இருந்து வருகின்ற 15ம் தேதிக்குள் இணையதளம் மூலமாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

35
Bank Job

மொத்தமாக 31 உதவி பொது மேலாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில் 28 வயது முதல் 40 வயதுக்குள் உள்ள இளைஞர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் ஏதேனும் ஒரு துறையில் முதுகலை பட்டம் பெற்றிருப்பதுடன் JAIIB, CAIIB, MBA தேர்ச்சியுடன் 4 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.1,57,000 ஊதியம் வழங்கப்படும்.

45
Bank Job

அதே பொன்று 25 மேலாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் 25 வயது முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். ஏதேனும் ஒரு துறையில் முதுகலை பட்டம் பெற்றிருப்பதுடன் JAIIB, CAIIB, MBA தேர்ச்சியுடன் 4 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.1,19,000 ஊதியம் வழங்கப்படும்.

55
Bank Job

நேர்முகத் தேர்வு மற்றும் குழு விவாதம் மூலமாக தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். பொது, ஓபிசி பிரிவினர் ரூ.1,000, இதர பிரிவினர் ரூ.200 செலுத்த வேண்டும். கட்டணத்தை இணையதளம் மூலமாக செலுத்த வேண்டும். www.idbibank.in என்ற இணையதளம் மூலம் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கான இறுதி தேதி வருகின்ற 15 ஆகும்.

Read more Photos on
click me!

Recommended Stories