Tamilnad Mercantile Bank: தமிழ்நாடு மெர்கன்டைல் ​​வங்கியில் வேலை! சம்பளம் எவ்வளவு தெரியுமா?

First Published | Sep 11, 2024, 12:45 PM IST

Tamilnad Mercantile Bank: தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி தூத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது.  டிஎம்பி (தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி), 1921ம் ஆண்டு தமிழக நாடார் சமுகத்தினரால் நாடார் வங்கி என வியாபார நிதி சேவைகளுக்காக ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் 1962ம் ஆண்டு பரந்துபட்ட வணிக மேம்பாட்டிற்காக தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி என பெயர் மாற்றப்பட்டது. 

இதையும் படிங்க: Education Loan: மிஸ் பண்ணிடாதீங்க! மாணவர்கள் கல்விக் கடன் பெற இன்று சிறப்பு முகாம்! என்னென்ன சான்றிதழ் தேவை?

2018-19 நிதி ஆண்டில் ரூ.2,585 மில்லியன் நிகர லாபம் ஈட்டியுள்ளது இவ்வங்கி. இந்த வங்கி தற்போது இந்தியா முழுவதும் 509 முழு கிளைகளையும், 12 பிராந்திய அலுவலகங்களையும், பதினொரு விரிவாக்க கவுண்டர்களையும், ஆறு மத்திய செயலாக்க மையங்களையும், ஒரு சேவை கிளை, 1094 தானியங்கி டெல்லர் இயந்திரங்களையும் (ஏடிஎம்) கொண்டுள்ளது. வங்கி இந்தியா முழுவதும் தனது கால்தடத்தை விரிவுபடுத்தி வருகிறது. 2010 முதல் 2015 வரையிலான ஐந்து ஆண்டுகளில் டி.எம்.பி வேகமாக வளர்ந்து வரும் தனியார் துறை வங்கியாக மதிப்பிடப்பட்டது. அதன் வலுவான வளர்ச்சியின் காரணமாக 2013, 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் சிறந்த வங்கியாக மதிப்பிடப்பட்டது.

Latest Videos


இந்நிலையில் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

காலிப்பணியிடங்கள் விவரம்: 

Law Officer பணிக்கென காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பதவிக்கு விண்ணப்பிப்பதற்கு முன்பாக விண்ணப்பதாரர்கள் முதலில் கல்வித் தகுதி மற்றும் வயது வரம்புகளைச் சரிபார்த்து, அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுவதுமாக படிக்க வேண்டும். BL, Law தகுதியான விண்ணப்பதாரர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம். 

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் நிபந்தனைகளின்படி மாத ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். செப்டம்பர் 15ம் தேதிக்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!