Published : Sep 20, 2024, 09:54 AM ISTUpdated : Sep 20, 2024, 10:00 AM IST
TNPSC Group 4 Vacancy: தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்திய குரூப் 4 தேர்வு முடிவுகள் அக்டோபர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி எனும் தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் ஆண்டுதோறும் பல்வேறு அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் முறையான அறிவிப்புகளுடன் நிரப்பப்பட்டு வருகின்றன. இதில், குரூப் 1 முதல் குரூப் 8 வரை பல்வேறு என பல நிலைகளில் தேர்வுகளை நடத்தி பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். 2024 ஆம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்விற்கான அறிவிப்பு ஜனவரி 30ம் தேதி வெளியானது. பின்னர் ஆன்லைன் வழியாக விண்ணப்பங்கள் 28ம் தேதி வரை பெறப்பட்டது. 6,244 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித்தேர்வு ஜூன் 9ம் தேதி நடைபெற்றது.
அதன்படி கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், தனி உதவியாளர், கிளார்க் என பல பணிகளுக்கு தேர்வு நடைபெற்றது. தமிழகம் முழுவதும் 7,247 தேர்வு மையங்களில் மொத்தம் 15.8 லட்சம் பேர் குரூப் 4 தேர்வை எழுதியுள்ளனர். குரூப் 4 தேர்வுகளை பொறுத்த வரை நேர்முகத்தேர்வு இல்லை. இந்த எழுத்து தேர்வில் உரிய கட் ஆஃப் மதிப்பெண்ணை பெற்றால் ஆவண சரிபார்ப்புக்கு பின் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பணியிடங்கள் ஒதுக்கப்படும்.
இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி-யின் புதிய தலைவராக மூத்த ஐஏஎஸ் அதிகாரி எஸ்.கே.பிரபாகர் பொறுப்பேற் பிறகு தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் இருக்கும் கால தாமதம் குறைக்கப்படும் என கூறிய அவர் குரூப் 4 தேர்வு முடிவுகள் அக்டோபர் மாதம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனால் தேர்வர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், டிஎன்பிஎஸ்சி குரூப் 4 காலிப்பணியிடங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முக்கிய அறிவிப்பு கடந்த வாரம் வெளியானது.
45
TNPSC
அதில், குரூப் 4 தேர்வில் கூடுதலாக 480 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதன்மூலம் குரூப் 4 தேர்வுக்கான காலியிடங்களின் எண்ணிக்கை 6,244லிருந்து 6704ஆக உயர்ந்துள்ளது. இளநிலை உதவியாளர் - 128, தட்டச்சர் - 14, சுருக்கெழுத்து தட்டச்சர் - 15, கேஷியர் - 1, உதவியாளர் – 3, இளநிலை கணக்கு உதவியாளர் – 8, வனக் காப்பாளர் – 30, வனவர் – 40, பில் கலெக்டர் – 47, உதவி விற்பனையாளர் - 194 ஆகிய பணியிடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளதாக தேர்வாணையம் அறிவித்திருந்தது.
ஆனால், காலி பணியிடங்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என்று தேர்வர்கள் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அன்புமணி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் காலிப் பணியிடங்களை அதிகரிக்க டிஎன்பிஎஸ்சி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பணி இடங்களை அதிகரிப்பது குறித்த ஆய்வு நடந்து வருவதாகவும் காலி பணியிடங்களை அதிகரிப்பது குறித்து, அக்டோபர் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இந்த தேர்வுக்கான கட் ஆஃப் மதிப்பெண்ணை டிஎன்பிஎஸ்சி இன்னும் அறிவிக்கவில்லை. இந்த காலிப்பணியிடங்கள் அதிகரிக்கும் பட்சத்தில், கட்-ஆஃப் மதிப்பெண்கள் குறைவும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.