வேலை பறிபோனால் உடைஞ்சு போகாதீங்க... நீங்க செய்ய வேண்டியது இதுதான்...

First Published | Sep 25, 2024, 5:15 PM IST

எந்த ஒரு நபருக்கும் திடீர் வேலை இழப்பு சவாலான சூழலை உருவாக்கும். ஆனால், கையிருப்பையும் சேமிப்பையும் கொஞ்சம் புத்திசாலித்தனமாகவும் சிக்கனமாகவும் கையாண்டால் இந்த கடினமான காலகட்டத்தைச் சமாளிக்க முடியும். அதற்கு சில பயனுள்ள ஆலோசனைகளை இத்தொகுப்பில் தெரிந்துகொள்ளலாம்.

Job Loss Tips

உங்கள் வீட்டுக் கடன், கார் கடன் மற்றும் பிற செலவுகளை வழக்கமான அடிப்படையில் செலுத்துவதற்கு உங்கள் சம்பளத்தையே பெரும்பாலும் சார்ந்திருக்கும் போது வேலையை இழப்பது சவாலான சூழலை உருவாக்கும். ஆனால், நிதி நிர்வாகத்தைக் கொஞ்சம் விவேகமாகக் கையாண்டால் இந்த கடினமான காலகட்டத்தை சமாளிக்க முடியும்.

செலவுகளில் கவனம் செலுத்த வேண்டும். முக்கியத் தேவைகள் தவிர இதர செலவுகளைக் குறைக்க முயல வேண்டும். வேறு வேலை கிடைத்து, நிலைமை மேம்படும் வரை கையிருப்பில் உள்ள பணத்தைச் சிக்கனமாகச் செலவிட வேண்டும். இதற்கு சில யோசனைகளைப் பார்க்கலாம்.

Financial Situation

முதல் படி உங்கள் தற்போதைய நிதி நிலையை கணக்கிட வேண்டும். உங்கள் சொத்துக்கள், பொறுப்புகள், மாதாந்திர செலவுகள் மற்றும் வருமான ஆதாரங்கள் அனைத்தையும் பட்டியலிடுங்கள். இந்த மதிப்பீடு நிதி நிலை எப்படி இருக்கிறது என தெளிவாகக் காட்டிவிடும். அடுத்தடுத்த முடிவுகளை எடுக்க இது உதவும்.

Tap to resize

Expenses

அத்தியாவசிய செலவுகளுக்கு முன்னுரிமை அளிப்பது முக்கியம். இருக்கும் பணத்தை வாடகை, வீட்டு உபயோகப் பொருட்கள், மளிகைப் பொருட்கள் மற்றும் மருந்துகள் போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்கு மட்டும் செலவிடவும். பொழுதுபோக்கு மற்றும் ஆடம்பரப் பொருட்களை வாங்குவது போன்ற அத்தியாவசியமற்ற செலவுகளை குறைக்கவும்.

Budget

வேலையில்லாதபோது இருக்கும் சேமிப்பை நிர்வகிப்பதற்கு ஒரு பட்ஜெட்டை உருவாக்குவது நல்லது. முக்கியத் தேவைகளுக்கு முன்னுரிமை தந்து, அதற்கு ஏற்ப மாதாந்திர வரவு செலவுத் திட்டத்தை உருவாக்கவும். தேவையற்ற செலவுகளைத் தவிர்க்க இந்த பட்ஜெட்டை கண்டிப்பாக கடைபிடிக்கவும்.

Emergency Fund

அவசரகாலத் தேவைக்காக சேமித்து வைத்த நிதியைவேலை இழப்பு போன்ற எதிர்பாராத சூழ்நிலைககளில் பயன்படுத்தலாம். இது பணத்தேவை உள்ள இந்தக் கலாத்தில் நிதி பாதுகாப்பை அளிக்கும். இந்த நிதியை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்த வேண்டும். குறைந்தபட்சம் 6-12 மாதங்கள் அத்தியாவசிய செலவுகளை ஈடுகட்டலாம். விரைவாகச் செலவு செய்து தீர்த்துவிடக் கூடாது.

Freelancing and Part-Time Jobs

ஃப்ரீலான்சிங் முறையில் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி சம்பாதிக்கலாம். அல்லது பகுதி நேர வேலை ஒன்றில் சேர்ந்து வேலை பார்த்துக்கொண்டே புதிய வேலையைத் தேடலாம். இது தற்காலிக நிவாரணமாக இருக்கும்.

Financial Goals

வேலை இழப்பு ஏற்பட்டால் உங்கள் நிதி சார்ந்த இலக்குகளை மறுமதிப்பீடு செய்ய வேண்டியிருக்கும். விடுமுறைகள் அல்லது ஆடம்பர பொருட்கள் வாங்கும் திட்டத்தை ஒத்திவைக்க வேண்டும். புது வேலை கிடைத்து, மீண்டும் பணப்புழக்கம் ஏற்படும் வரை கவனமாக செலவு செய்ய வேண்டும்.

Credit Cards

செலவினங்களை நிர்வகிப்பதற்கு கிரெடிட் கார்டுகள் அல்லது தனிநபர் கடன்களை பயன்படுத்துவது ஒரு வாய்ப்பாக இருந்தாலும், எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். அதிக வட்டியில் கடன் பெறுவது கட்டுப்பாட்டை மீறிப் போய்விட்டால் நிதி நெருக்கடி ஏற்பட்டு நிலைமையை மோசமாக்கிவிடும். கடன் பெறுவதற்கு முன்னால், திருப்பிச் செலுத்தும் திட்டம் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்வது முக்கியம்.

Stay Positive

எப்போதும் நேர்மறையான கண்ணோட்டத்தை பராமரிப்பது அவசியம். தொடர்ந்து தொழில்துறை சார்ந்த நிகழ்வுகளில் கலந்துகொள்வது, LinkedIn போன்ற தொழில்முறை தளங்களில் ஆக்டிவாக இருப்பது போன்றவை சீக்கிரம் புதிய வேலை கிடைப்பதற்கா வாய்ப்பை அதிகரிக்கும்.

Upskill

வேலை இல்லாத நேரத்தில் கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்தி திறமையை மேம்படுத்திக் கொள்வது நல்லது. ஆன்லைன் படிப்புகள், சான்றிதழ்கள் மற்றும் பயிற்சித் திட்டங்களில் சேர்ந்து ஆக்கபூர்வமாக செயல்படுவது வேலைவாய்ப்புக்கான வழிகளைத் திறக்கும். வேலை சந்தையில் காணப்படும் போட்டிக்கு ஈடுகொடுக்கும் ஆற்றலையும் கொடுக்கும்.

Recover from job loss

வேலையின்மை காலத்தில் கையிருப்புத் தொகையை திறம்பட நிர்வகிப்பதற்கு கவனமாக திட்டமிடல் மற்றும் ஒழுக்கம் தேவை. இந்த சூழ்நிலை தற்காலிகமானது என்பதை மனதில் கொள்ளவேண்டியது அவசியம். இவற்றை கருத்தில் கொச்டு செயல்பட்டால் சவாலான சூழ்நிலையையும் சமாளிக்க முடியும்.

Latest Videos

click me!