நாட்டின் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ, ஸ்பெஷலிஸ்ட் கேடர் அதிகாரி பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு அறிவித்துள்ளது. இந்த வேலைக்கு ஆண்டுக்கு ரூ.80 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எஸ்பிஐ புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நாட்டின் பொதுத்துறை வங்கி எஸ்பிஐ தற்போது Specialist Cadre Officer மிகப்பெரிய பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் குறைந்தது பட்டதாரி ஆக வேண்டும். மேலும் வங்கி, IT அல்லது e-commerce துறைகளில் குறைந்தது 15 ஆண்டுகள் தொழில்முறை அனுபவம் அவசியம் என எஸ்பிஐ தெரிவித்துள்ளது. அதோடு விண்ணப்பதாரரின் வயது 50 ஆண்டுகளை மிஞ்சக்கூடாது என்ற நிபந்தனையும் உள்ளது.
23
ஸ்பெஷலிஸ்ட் கேடர் அதிகாரி பணியிடம்
தேர்வு நடைமுறை இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. முதலில் விண்ணப்பங்கள் அடிப்படையில் ஷார்ட்லிஸ்ட் செய்யப்படும். அதன் பின்னர் தகுதியானவர்களுக்கு தனிப்பட்ட நேர்காணல் நடத்தி இறுதித் தேர்வு முடியும். தேர்வு செய்யப்பட்டவர்கள் 5 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் பணியில் நியமிக்கப்படுவார்கள். இந்த ஆட்சேர்ப்பில் மிகப்பெரிய கவனம் பெற்ற அம்சம் சம்பளம் தான். மூத்த நிலை பதவிகளுக்கு சம்பளம் ரூ.40 லட்சம் முதல் ரூ.80 லட்சம் வரை இருக்கலாம் என கூறப்படுகிறது.
33
எஸ்பிஐ சிறப்பு அதிகாரி சம்பளம்
மேலும் துணை மேலாளர் நிலை பதவிகளுக்கு மாத சம்பளம் சுமார் ரூ.64,820 முதல் ரூ.93,960 வரை கிடைக்க வாய்ப்புள்ளது. மொத்தத்தில், வங்கி மற்றும் தொழில்நுட்பத் துறையில் நீண்ட அனுபவம் கொண்டவர்களுக்கு எஸ்பிஐ வழங்கும் இந்த ஆட்சேர்ப்பு ஒரு மதிப்புமிக்க மற்றும் கவுரவமான வாய்ப்பு என்று சொல்லலாம். அரசு வங்கியின் வேலை பாதுகாப்பு, உயர்ந்த சம்பளம், பொறுப்புள்ள பதவி ஆகியவை சேர்ந்தால் இது பலருக்கும் வாழ்க்கையை மாற்றும் ஒரு நல்ல திருப்பமாக அமையக்கூடும்.