18 வயசானாலே போதும்.. இஸ்ரோவில் காத்திருக்கும் வேலை.. தகுதி, வயது வரம்பு, கட்டணம் முழு விபரம் இதோ

Published : Jan 25, 2026, 10:03 AM IST

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) காலியான பணியிடங்களை அறிவித்துள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் பிப்ரவரி 12 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதற்கான கல்வித் தகுதி, சம்பளம் மற்றும் தேர்வு முறை பற்றி இங்கே காணலாம்.

PREV
15
இஸ்ரோ வேலைவாய்ப்பு 2026

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரோ சார்பில் வேலை தேடும் இளைஞர்களுக்கு நல்ல வாய்ப்பு வந்துள்ளது. இஸ்ரோவின் விண்வெளி பயன்பாட்டு மையம் (SAC), அகமதாபாத் பிரிவில் 49 விஞ்ஞானி/பொறியாளர் பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் செயல்முறை முழுவதும் ஆன்லைன் முறையில் நடைபெறுகிறது.

25
விண்ணப்ப தேதி விவரம்

ஆன்லைன் விண்ணப்ப தொடக்கம்: 23-01-2026

கடைசி தேதி: 12-02-2026

விண்ணப்பிக்க வேண்டிய இணையதளம்: sac.gov.in / careers.sac.gov.in

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த காலக்கெடுவுக்குள் விண்ணப்பிக்கலாம்.

கல்வித் தகுதி

இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி/பல்கலைக்கழகத்தில் இருந்து கீழ்கண்ட தகுதிகளில் ஏதேனும் ஒன்றைப் பெற்றிருக்க வேண்டும்.

Ph.D / ME / M.Tech / M.Sc (Engg) / M.Sc / BE / B.Tech / B.Sc

(பணிப்பிரிவுக்கு ஏற்ப கூடுதல் தகுதிகள் தேவைப்படலாம்.)

35
காலியிடங்கள் + சம்பளம்

விஞ்ஞானி/பொறியாளர் ‘SC’: 45 பணியிடங்கள்

சம்பளம்:

SC: ரூ.56,100 முதல் ரூ.1,77,500 வரை

SD: ரூ.67,100 முதல் ரூ.2,08,700 வரை

இந்த சம்பள அளவுகள் அரசுத் தர விதிகளின்படி வழங்கப்படும்.

வயது வரம்பு + தேர்வு முறை

வயது கணக்கு தேதி: 12-02-2026

குறைந்த வயது: 18

அதிகபட்ச வயது: 35

SC/ST/OBC உள்ளிட்ட பிரிவினருக்கு விதிப்படி வயது தளர்வு வழங்கப்படும்.

45
இஸ்ரோ எஸ்ஏசி காலிப் பணியிடங்கள் 2026

தேர்வு முறை:

எழுத்துத் தேர்வு

தனிப்பட்ட நேர்காணல்

ஆவண சரிபார்ப்பு

விண்ணப்பக் கட்டணம் + விண்ணப்பிக்கும் முறை

பொது/OBC/EWS: ரூ.750

SC/ST/PwBD/முன்னாள் ராணுவத்தினர்: ரூ.250

SD: இலவசம்.

55
இஸ்ரோ விண்ணப்பக் கட்டண விவரங்கள்

விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் முதலில் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவு செய்து லாகின் செய்ய வேண்டும். அதன் பின்னர் விண்ணப்பப் படிவத்தில் தேவையான அனைத்து விவரங்களையும் சரியாக நிரப்பி, கேட்டுள்ள ஆவணங்களை சரியான வடிவத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். தொடர்ந்து விண்ணப்பிக்கும் விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தி படிவத்தை சமர்ப்பிக்கவும். இறுதியாக, எதிர்கால பயன்பாட்டுக்கான விண்ணப்பத்தின் பிரிண்ட் அவுட் எடுத்துச் சேமித்து வைக்க வேண்டும்.

Read more Photos on
click me!

Recommended Stories