ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) 2,273 சர்க்கிள் பேஸ்டு ஆபிசர் (CBO) பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்கிறது. ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் நடத்தப்படும். இதற்கான முழுமையான விவரங்களை பார்க்கலாம்.
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) 2,273 ‘சர்க்கிள் பேஸ்டு ஆபிசர்’ (CBO) பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. முதலில் பிப்ரவரி 18 கடைசி நாளாக அறிவிக்கப்பட்ட நிலையில், விண்ணப்பதாரர்களின் கோரிக்கையை கருத்தில் கொண்டு 25 பிப்ரவரி 2026 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. வங்கி துறையில் பணியாற்ற விரும்பும் பட்டதாரிகளுக்கு இது சிறந்த வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.
25
2273 காலிப்பணியிடங்கள்
இதன் மூலம் நாடு முழுவதும் 16 சர்க்கிள்களில் மொத்தம் 2,273 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இதில் 2,050 இடங்கள் வழக்கமான காலிப்பணியிடங்களாகவும், 223 இடங்கள் முந்தைய ஆண்டுகளின் பின்வாங்கிய (பேக்லாக்) பணியிடங்களாகவும் உள்ளன. மகாராஷ்டிரா சர்க்கிளில் 194 காலிப்பணியிடங்களும், மும்பை மெட்ரோ சர்க்கிளில் 143 இடங்களும் உள்ளன. அதனைத் தொடர்ந்து அஹமதாபாத், பெங்களூரு, சண்டிகர், சென்னை, கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களிலும் கனிசமான பணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
35
கல்வித்தகுதி விவரங்கள்
தகுதிகள் குறித்து பார்க்கும்போது, அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மருத்துவம், பொறியியல், சிஏ போன்ற தொழில்முறை பட்டதாரிகளும் தகுதியுடையவர்கள். 31 டிசம்பர் 2025 நிலவரப்படி, வணிக வங்கி அல்லது பிராந்திய கிராம வங்கியில் குறைந்தது இரண்டு ஆண்டுகள் அதிகாரியாக பணிபுரிந்த அனுபவம் அவசியம். வயது வரம்பு 21 முதல் 30 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரசு விதிகளின்படி ஒதுக்கீட்டு பிரிவுகளுக்கு தளர்வு வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் சர்க்கிளின் உள்ளூர் மொழி அறிவு கட்டாயம். தேர்வு நடைமுறை நான்கு கட்டங்களாக நடைபெறும். முதலில் ஆன்லைன் எழுத்துத் தேர்வு (விடை தேர்வு மற்றும் விளக்கத் தேர்வு) மார்ச் 2026ல் நடத்தப்படும். அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சரிபார்ப்பு, நேர்முகத் தேர்வு மற்றும் உள்ளூர் மொழி திறன் பரிசோதனை நடைபெறும்.
55
வங்கி அதிகாரி வேலை
ஆர்வமுள்ளவர்கள் எஸ்பிஐ-யின் அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக 25 பிப்ரவரி 2026க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். பொதுப் பிரிவு, OBC மற்றும் EWS விண்ணப்பதாரர்களுக்கு ரூ.750 கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு கட்டணம் இல்லை. அரசு வங்கியில் நிலையான பணியை நோக்கமாகக் கொண்டவர்களுக்கு இது சிறந்த வாய்ப்பு எனலாம்.