வேலைவாய்ப்பு செய்தி: இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் அருமையான வேலைவாய்ப்பு. டெல்லியில் உள்ள இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் இன்றே விண்ணப்பிக்கலாம். எப்படி விண்ணப்பிப்பது?
IGNOU-வில் நிர்வாக உதவியாளர் வேலைவாய்ப்பு! பட்டதாரிகளுக்கு அருமையான வாய்ப்பு
இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் நிர்வாக உதவியாளர் பதவிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். இது குறித்த முழு விவரங்களையும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
25
மாதம் ரூ.30,000 சம்பளத்தில் அரசு வேலை! ஆறு மாத ஒப்பந்தப் பணி
தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.30,000 சம்பளம் வழங்கப்படும். ஆரம்பத்தில் ஆறு மாதங்களுக்கு நியமிக்கப்பட்டு, பின்னர் அனுபவத்தின் அடிப்படையில் பதவிக்காலம் நீட்டிக்கப்படலாம்.
விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் என்ன? 7 வருட பணி அனுபவம் அவசியம்
விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும், எம்.எஸ். ஆபிஸ் தெரிந்திருக்க வேண்டும் மற்றும் டெல்லி ஜல் போர்டில் 7 வருட பணி அனுபவம் அவசியம்.
விண்ணப்பிப்பது எப்படி? ஆகஸ்ட் 25-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவும்
ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் IGNOU-வின் அதிகாரப்பூர்வ இணையதளமான ignou.ac.in-க்குச் சென்று, முகப்புப் பக்கத்தில் உள்ள அறிவிப்பைப் பார்த்து விண்ணப்பிக்கலாம். கடைசி தேதி ஆகஸ்ட் 25.
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவிலும் 1500-க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள்!
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் (SBI) ஜூனியர் அசோசியேட் பணியிடங்களுக்கு 1,538 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த சிறப்பு ஆட்சேர்ப்பு மூலம் SC, ST, OBC பிரிவுகளுக்கான பின்னடைவு காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. தகுதியுள்ள இந்திய குடிமக்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பப் பதிவு ஆகஸ்ட் 7-ம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 27, 2026 அன்று நிறைவடைகிறது. விண்ணப்பதாரர்களின் வயது 20 முதல் 28 ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். முதல்நிலைத் தேர்வு செப்டம்பர் மாதத்திலும், முதன்மைத் தேர்வு அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்திலும் நடைபெற உள்ளது.