Job: பட்டதாரி, டிப்ளமோ, ITI முடித்தவர்களுக்கு ஜாக்பாட்.! இந்திய விமான நிலைய ஆணையத்தில் காத்திருக்கு வேலை.!

Published : Aug 04, 2026, 10:54 AM IST

இந்திய விமான நிலைய ஆணையத்தில் பணியாற்ற விருப்பம் உள்ளவர்களுக்கு ஜாக்பாட் காத்ருக்கிறது. பட்டதாரிகள், டிப்ளமோ மற்றும் ஐடிஐ முடித்தவர்களுக்கு கைநிறைய சம்பளத்துடன் கூடிய பயிற்சி வழங்கப்படுகிறது.

PREV
15
இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

இந்திய விமான நிலைய ஆணையம் (AAI) கிழக்கு மண்டலத்தில் வேலை தேடுபவர்களுக்கு சிறந்த வாய்ப்பை அறிவித்துள்ளது. ஒரு ஆண்டு கால அப்ரண்டிஸ் (Apprentice) பயிற்சிக்காக மொத்தம் 140 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் Graduate, Diploma மற்றும் ITI பிரிவுகளைச் சேர்ந்த தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வாகும் பயிற்சியாளர்களுக்கு மாதாந்திர உதவித்தொகையும் வழங்கப்படும். அரசு நிறுவனத்தில் அனுபவம் பெற விரும்பும் இளைஞர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். தகுதி, வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட விவரங்களை அறிந்து, கடைசி தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

25
பட்டதாரி, டிப்ளமோ, ஐடிஐ முடித்தவரா?

பட்டதாரி (Graduate) பிரிவில் 35, டிப்ளமோ (Diploma) பிரிவில் 35, மற்றும் ஐடிஐ (ITI) பிரிவில் 70 என மொத்தம் 140 அப்ரண்டிஸ் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கல்வித் தகுதியை பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரர்கள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி உடனடியாக விண்ணப்பிக்கலாம். அரசு நிறுவனத்தில் ஒரு ஆண்டு பயிற்சி பெற்று அனுபவத்துடன் மாதாந்திர உதவித்தொகையும் பெறும் வாய்ப்பு இருப்பதால், வேலைவாய்ப்பை எதிர்நோக்கும் இளைஞர்கள் கடைசி தேதிக்குள் விண்ணப்பிப்பது நல்லது.

35
மாதம் ரூ.15,000 வரை உதவித்தொகையுடன் அப்ரண்டிஸ் பயிற்சி!

இந்த அப்ரண்டிஸ் பயிற்சிக்குத் தேர்வு செய்யப்படுவோருக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்கப்படும். அதன்படி, பட்டதாரி (Graduate) அப்ரண்டிஸ்களுக்கு மாதம் ரூ.15,000, டிப்ளமோ (Diploma) அப்ரண்டிஸ்களுக்கு ரூ.12,000, மற்றும் ஐடிஐ (ITI) டிரெய்னிகளுக்கு மாதம் ரூ.9,600 உதவித்தொகையாக வழங்கப்படும். அரசு நிறுவனத்தில் பயிற்சியுடன் வருமானமும் கிடைக்கும் இந்த வாய்ப்பு, வேலை தேடிக்கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

45
விமான நிலையங்களில் பயிற்சி பெறும் வாய்ப்பு!

இந்த அப்ரண்டிஸ் பயிற்சிக்குத் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள், இந்திய விமான நிலைய ஆணையத்தின் (AAI) கிழக்கு மண்டலத்துக்கு உட்பட்ட கொல்கத்தா, பாக்டோக்ரா, ராஞ்சி, பாட்னா, புவனேஸ்வர், ராய்ப்பூர் உள்ளிட்ட முக்கிய விமான நிலையங்களில் ஒரு ஆண்டு கால பயிற்சியை மேற்கொள்வார்கள். நவீன விமான நிலைய சூழலில் நேரடி பணியனுபவத்தைப் பெறும் இந்த பயிற்சி, எதிர்கால வேலைவாய்ப்புகளுக்கு மதிப்புமிக்க அனுபவமாக அமையும்.

55
AAI அப்ரண்டிஸ் பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள், இந்திய விமான நிலைய ஆணையத்தின் (AAI) அதிகாரப்பூர்வ ஆட்சேர்ப்பு இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் முன் தகுதி, வயது வரம்பு, தேவையான ஆவணங்கள் மற்றும் விண்ணப்பிக்கும் நடைமுறை உள்ளிட்ட விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் சரிபார்த்து, கடைசி தேதிக்குள் விண்ணப்பிப்பது அவசியம். ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் AAI-யின் அதிகாரப்பூர்வ ஆட்சேர்ப்பு இணையதளமானhttps://www.aai.aero/en/careers/recruitment மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories