RBI Jobs: அரசு வேலை தேடுபவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு! 1 மணி நேரத்திற்கு ரூ.1,000 சம்பளம்.. இதான் கடைசி தேதி

Published : Jul 31, 2026, 07:03 PM IST

RBI Jobs: அரசு வேலைக்காக காத்திருப்போருக்கு இந்திய ரிசர்வ் வங்கி (RBI) புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.

PREV
14
ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு

நீண்ட நாட்களாக அரசு வேலைக்காக தயாராகி வரும் விண்ணப்பதாரர்களுக்கு இந்திய ரிசர்வ் வங்கி (RBI) நல்ல வாய்ப்பை அறிவித்துள்ளது. வங்கியில் காலியாக உள்ள மருத்துவ ஆலோசகர் பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணிக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் கால அவகாசமும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

சம்பளம்

இந்தப் பதவிக்குத் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.1,000 ஊதியம் வழங்கப்படும் என்று ஆர்பிஐ தெரிவித்துள்ளது.

கல்வித் தகுதி

விண்ணப்பதாரர்கள் இந்திய மருத்துவ கவுன்சில் (MCI) அல்லது அதற்கு இணையான அங்கீகரிக்கப்பட்ட அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் MBBS பட்டம் பெற்றிருக்க வேண்டும். பொது மருத்துவம் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். மேலும், தொடர்புடைய துறையில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.

24
பணியிடம்

இந்தப் பதவிக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் லக்னோ நகரில் பணியாற்ற வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் RBI-யின் அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு இணையதளத்தில் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். தேவையான விவரங்களை நிரப்பி, குறிப்பிட்ட ஆவணங்களைப் பதிவேற்றி விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

34
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆகஸ்ட் 20

விண்ணப்பிக்கும் முன், வயது வரம்பு, பணிநேரம், ஒப்பந்தங்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் சரிபார்ப்பது அவசியம்.

இதற்கிடையில், எய்ம்ஸ் நிறுவனங்களிலும் 2,218 நர்சிங் அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அரசு மருத்துவத் துறையில் பணியாற்ற விரும்புவோருக்கு இது ஒரு முக்கிய வாய்ப்பாகும்.

மார்வெல் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்! டிவிஎஸ் ரைடர் டாக்டர் டூம் எடிஷன் விலை, அம்சங்கள் முழு விவரம்

44
மருத்துவ ஆலோசகர்

அறிவிப்பின்படி, ஒரு மருத்துவ ஆலோசகர் பணியிடம் மட்டுமே நிரப்பப்பட உள்ளது. இது ஒப்பந்த அடிப்படையிலான நியமனமாகும். ஆரம்பத்தில் 3 ஆண்டுகள் ஒப்பந்த காலம் இருக்கும். பின்னர், வங்கியின் தேவையைப் பொறுத்து ஒப்பந்தத்தை நீட்டிக்கலாம்.

குறிப்பு: விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் முன் ஆர்பிஐ வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாகப் படித்து, தகுதியை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

Read more Photos on
click me!

Recommended Stories