பொருளாதார சிக்கலால் கல்வியை பாதியில் நிறுத்த வேண்டிய நிலை ஏற்படாமல் இருக்க, திறமையான மாணவர்களுக்கு உதவும் வகையில் எஸ்பிஐ அறக்கட்டளை தனது ஆஷா கல்வி உதவித்தொகை திட்டம் 2026-க்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்தத் திட்டத்தின் மூலம் தகுதியான மாணவர்களுக்கு, அவர்கள் விண்ணப்பிக்கும் பிரிவைப் பொறுத்து ரூ.15 ஆயிரம் முதல் ரூ.15 லட்சம் வரை கல்வி உதவித்தொகை வழங்கப்பட வாய்ப்பு உள்ளது. பள்ளி மாணவர்கள் மட்டுமின்றி, கல்லூரி, தொழில்முறை படிப்புகள், மருத்துவம், இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள், இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனங்கள் மற்றும் வெளிநாடுகளில் உயர்கல்வி பயிலும் மாணவர்களும் இந்தத் திட்டத்தில் இடம்பெற்றுள்ளனர்.