கூகுள் லேப்ஸ், மாணவர்களின் விருப்பத்திற்கேற்ப கடினமான பாடங்களை கதை, ஆடியோ போன்ற எளிய வடிவங்களில் மாற்றும் புதிய AI கருவியை உருவாக்கியுள்ளது. தற்போது சோதனை முயற்சியில் உள்ள இதன் சில மாதிரிகளை மாணவர்கள் முயற்சி செய்து பார்க்கலாம்.
மாணவர்கள் கஷ்டப்பட்டுப் படிக்கும் பாடங்களை அவர்களுக்குப் பிடித்தமான முறையில் மாற்றிக் கொடுக்கும் புதிய AI கருவியை கூகுள் லேப்ஸ் (Google Labs) உருவாக்கியுள்ளது.
இந்த AI மாடல், ஒரு மாணவரின் கல்வித் தரத்தையும் (Grade Level), உணவு, விளையாட்டு, தொழில்நுட்பம் போன்றவற்றில் மாணவருக்குப் பிடித்தமான விஷயங்களையும் அடிப்படையாகக் கொண்டு பாடங்களை வடிவமைக்கிறது.
25
இது எப்படிச் செயல்படுகிறது?
PDF பதிவேற்றம்: மாணவர்கள் தங்கள் பாடப்புத்தகத்தின் PDF கோப்பை இதில் பதிவேற்ற வேண்டும்.
தனிப்பயனாக்கம் (Personalize): பின்னர் தங்களின் வகுப்பு மற்றும் விருப்பமான தலைப்புகளைத் தேர்ந்தெடுத்து 'Personalize' என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
பாட மாற்றம்: உடனே அந்தப் பாடம் அந்த மாணவருக்குப் பிடித்தமான உதாரணங்களுடன், எளிமையான கதையாகவோ அல்லது ஆடியோவாகவோ மாற்றப்படும்.
35
ஆடியோ, விஷுவல் வடிவில் பாடங்கள்
மாணவர்களும் ஆசிரியர்களும் பாடங்களை வெறும் உரையாக (Text) மட்டும் படிக்காமல், பல்வேறு வடிவங்களில் மாற்றிப் படிக்கலாம்:
கூகுள் நடத்திய ஆய்வில், 15 முதல் 18 வயதுடைய 60 மாணவர்கள் பங்கேற்றனர். சாதாரணப் பாடப்புத்தகங்களைப் படித்த மாணவர்களை விட, இந்த "Learn Your Way" கருவியைப் பயன்படுத்திய மாணவர்கள் தேர்வுகளில் 11% அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். மேலும், படித்த விஷயங்கள் அவர்களுக்கு நீண்ட காலம் நினைவில் இருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
55
யார் இதைப் பயன்படுத்தலாம்?
தற்போது இது ஒரு ஆராய்ச்சி முயற்சி (Research Experiment) என்பதால், அனைவருக்கும் முழுமையாகக் கிடைக்கவில்லை. இருப்பினும், கூகுளின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வரலாறு, உயிரியல் போன்ற சில பாடங்களுக்கு ஏற்கனவே உருவாக்கப்பட்ட மாதிரிகளை (Demo Lessons) மாணவர்கள் முயற்சி செய்து பார்க்கலாம்.