18 முதல் 45 வயதுடைய பெண்களுக்கு ஒரு மாத இலவச தொழில் பயிற்சி வழங்கப்படுகிறது. இந்த பயிற்சியில், வாழை நாரிலிருந்து கைவினைப் பொருட்கள் செய்வது, சந்தைப்படுத்துவது, மற்றும் அரசு மானியம் பெறுவது குறித்து கற்பிக்கப்படும்.
இன்றைய காலத்தில் பெண்கள் தன்னம்பிக்கையுடன் நிற்க தொழிலும் வருமானமும் அத்தியாவசியமாகி விட்டது. திறமை இருந்தும் வாய்ப்பு இல்லாமல் வீட்டு வரம்புக்குள் மட்டுப்படும் பலருக்கு இப்போது ஒரு நல்ல தளமாக இலவச தொழில் பயிற்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கற்றால் கைவினை, செய்து பார்த்தால் வருமானம் என்ற நோக்கில், பெண்களை தொழில் துறைக்கு முன்னேற்ற உதவும் வகையில் சேலம் மாவட்டத்தில் பயிற்சி வழங்கப்படுகிறது.
25
ஒரு மாதம் இலவசல பயிற்சி மக்களே
18 முதல் 45 வயதுக்குள் உள்ள பெண்களுக்கு ஒரு மாதம் முழுக்க இலவச தொழில் முனைவோர் பயிற்சி சேலம் சக்தி கைலாஷ் மகளிர் கல்லூரியில் நடைபெற உள்ளது. பழக்கமான வாழைமரத்தின் பயன்பாடில்லாத பகுதிகளிலிருந்து நார் மற்றும் மட்டை பிரித்து பூஜை கூடை, மேஜை விரிப்பு, ஹேண்ட் பேக், அலங்கார பொருட்கள், பைல், பூந்தொட்டி போன்ற பல கைவினைப் பொருட்களை உருவாக்குவது கற்பிக்கப்படும். மேலும் தயாரிக்கப்பட்ட பொருட்களை சந்தைப்படுத்தல், தொழில் திட்ட அறிக்கை தயார் செய்தல், அரசு மானியம் பெறுவது போன்ற பயனுள்ள வழிகாட்டுதல்களும் பயிற்சியில் இடம் பெறும். பயிற்சி முடிந்தவுடன் மத்திய அரசு அங்கீகரித்த சான்றிதழும் வழங்கப்படும், இது தொழில் தொடங்குவதற்கு கூடுதல் ஆதரவாக இருக்கும்.
35
முன்பதிவு செய்து கூடுதல் தகவல்களை பெறலாம்
பயனாளர்கள் தேர்வு டிசம்பர் 5 காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. சேலம் மாவட்ட பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். சேர விரும்புவோர் 88258 12528 என்ற எண்ணிற்கு SMS அனுப்பி பெயரை முன்பதிவு செய்து கூடுதல் தகவல்களைப் பெறலாம்.
வாழ்க்கையை மாற்றும் வாய்ப்புகள் கதவைத் தட்டும்போது அதைத் திறப்பதே வெற்றியின் ஆரம்பம். இந்த பயிற்சி பல பெண்களின் எதிர்காலத்திற்கு பாதை அமைக்கக்கூடியது. ஆர்வமுள்ள பெண்கள் இந்த வாய்ப்பை தவறவிடாமல் உடனே பதிவு செய்து பயனடையுங்கள்!
55
அக்காமார்களே, தங்கச்சிமார்களே இது நமக்கான பயிற்சி
இந்த பயிற்சி, பெண்களுக்கு தொழில் முனைவோராக தங்களை உருவாக்க ஒரு அரிய வாய்ப்பு. புதிய தொழில்நுட்பங்களை கற்றுக்கொள்வதோடு, வருமானம் ஏற்படுத்தும் திறனையும் வளர்க்கும் வாய்ப்பாக இது அமைகிறது. பெண்கள் தன்னம்பிக்கை மற்றும் சுயமாக சம்பாதிக்கும் திறனை வளர்த்துக் கொள்ள இந்த வாய்ப்பை முழுமையாக பயன்படுத்த வேண்டும்.