Job Alert: மருத்துவத் துறையில் கோல்டன் Job Offer.! வேலைவாய்ப்பை அள்ளி தெறிக்கவிட்ட AIIMS.!

Published : Dec 03, 2025, 12:08 PM IST

அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (AIIMS) CRE-4 தேர்வு மூலம் 1353 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவித்துள்ளது. AIIMS, JIPMER, ICMR போன்ற நிறுவனங்களில் டெக்னீஷியன், நர்ஸ், நிர்வாக அதிகாரி உள்ளிட்ட பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

PREV
12
AIIMS அழைக்கிறது மக்களே

AIIMS (All India Institute of Medical Sciences) நிறுவனம் Common Recruitment Examination – 4 (CRE-4) வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 11/11/2025 அன்று No: 355/2025 என வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பின் மூலம் இந்தியா முழுவதும் உள்ள AIIMS நிறுவனங்களில் மொத்தம் 1353 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 14.11.2025 முதல் 04.12.2025 வரை ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கு முன், தகுதி, வயது வரம்பு, பணியின் தன்மை போன்ற விவரங்களை கவனமாகப் படிக்க AIIMS அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பரிந்துரைக்கப்படுகிறது.

சான்ஸ்! நல்ல சான்ஸ்

இந்த CRE-4 தேர்வில் நாடு முழுவதும் உள்ள AIIMS Bathinda, AIIMS New Delhi, AIIMS Madurai, AIIMS Nagpur, JIPMER, ICMR உள்ளிட்ட பல மத்திய அரசு மருத்துவ நிறுவனங்கள் பங்கேற்கின்றன. பல்வேறு துறைகளில் உதவி நிர்வாக அதிகாரி முதல் ஸ்டாப் நர்ஸ், டெக்னீஷியன், லாப் அட்டெண்டண்ட், டிரைவர் போன்ற பணிகளுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மருத்துவம், நிர்வாகம், தொழில்நுட்பம், பொறியியல் உள்ளிட்ட பிரிவுகளில் 1000-க்கும் மேற்பட்ட வேலைகள் காலியாக உள்ளது.

22
இளைஞர்களுக்கு ஒரு மிகப்பெரிய வாய்ப்பு

Assistant Dietician, AE/JE (Electrical, Civil, AC&R), Technician OT, Radiology Technician, Pharmacist, Store Officer, Medical Social Worker, Physiotherapist, Yoga Instructor, Photographer போன்ற பல்வேறு பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். பணிக்கு ஏற்ப கல்வித்தகுதி, சம்பள விவரங்கள் மற்றும் வயது வரம்பு மாறுபடுகிறது. அரசு விதிகளின்படி SC/ST/OBC/PwBD வேட்பாளர்களுக்கு வயது தளர்வு வழங்கப்படுகிறது. தேர்வு முறையில் முதலில் Computer Based Test (CBT) நடைபெறும். அதைப் பின்தொடர்ந்து திறன் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும்.

விண்ணப்பக் கட்டணம் PwBD-க்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது; SC/ST/EWS வேட்பாளர்களுக்கு ₹2400, மற்றவர்களுக்கு ₹3000. Online Payment முறையில் மட்டுமே கட்டணம் செலுத்த வேண்டும். விண்ணப்பப் பதிவு 14.11.2025 முதல் திறக்கப்பட்டு 04.12.2025 அன்று நிறைவடைகிறது. தேர்வு 22.12.2025 முதல் 24.12.2025 வரை நடைபெற உள்ளது.

இந்த AIIMS CRE-4 அறிவிப்பு, மருத்துவத்துறையில் நிலையான மத்திய அரசு பணியை கனவு காணும் இளைஞர்களுக்கு ஒரு மிகப்பெரிய வாய்ப்பு. அதிகாரப்பூர்வ AIIMS இணையதளத்தில் இருந்து Notification PDF மற்றும் Apply Link-ஐ பதிவிறக்கம் செய்து உடனே விண்ணப்பிக்கலாம். இந்தியாவின் முக்கிய மருத்துவ நிறுவனங்களில் பணிபுரிய זו* இந்த ஆண்டு மிகச்சிறந்த சந்தர்ப்பமாகக் கருதப்படுகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories