Group A-வில் Assistant Secretary 08, Assistant Director 3 பிரிவுகளில் 27, Accounts Officer 02 பணியிடங்கள் உள்ளன. Group B-வில் Superintendent 27, Junior Translation Officer 09 இடங்கள், Group C-வில் Junior Accountant 16 மற்றும் Junior Assistant 35 காலியிடங்கள் உள்ளன. Assistant Director மற்றும் Professor பணிகளுக்கு PG 55% மதிப்பெண்களுடன் B.Ed/M.Ed, NET/SLET போன்ற தகுதிகள் விரும்பத்தக்கவை.
Accounts Officer பணிக்கு Commerce/Finance/Accounts துறையில் Degree/MBA/CA/ICWA தகுதி தேவை. Junior Accountant மற்றும் Junior Assistant பணிகளுக்கு 12th Pass மற்றும் கணினி தட்டச்சு திறன் அவசியம். வயது வரம்பு 27 முதல் 35 வரை பதவி அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது; SC/ST, OBC, PwBD பிரிவுகளுக்கு அரசு விதிப்படி வயது தளர்வு உண்டு.
ஊதியம் Group A-க்கு Level 10, Group B-க்கு Level 6, Group C-க்கு Level 2 என வழங்கப்படும். தேர்வு முறை Tier 1 Preliminary Exam, Tier 2 Objective+Descriptive Main Exam, Tier 3 Interview என மூன்று நிலைகளில் நடைபெறும். தமிழ்நாட்டில் தேர்வு மையம் சென்னை என அறிவிக்கப்பட்டுள்ளது.
Group A-க்கு Others விண்ணப்பக் கட்டணம் ₹1750; SC/ST/PwBD/ExS/Women ₹250. Group B & C-க்கு Others ₹1050; SC/ST/PwBD/ExS/Women ₹250. விண்ணப்பிக்க https://www.cbse.gov.in/ இணையதளத்தில் Online Registration செய்து தேவையான ஆவணங்களை Upload செய்து fee கட்டி விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம். மத்திய அரசு பணியில் சேர விரும்புபவர்களுக்கு இது ஒரு முக்கிய வாய்ப்பு; விண்ணப்பிக்க கடைசி தேதி 22.12.2025.