மேற்கண்ட பிரிவுகளை சேர்ந்த மாணவர்கள் தாங்கள் படிக்கும் கல்லூரி முதல்வரை சந்தித்து இந்த திட்டத்துக்குரிய விண்ணப்பங்களை பெற்று அதை சரியான தகவல்களுடன் பூர்த்தி செய்து ஒப்படைக்க வேண்டும். விண்ணப்பத்தின்போது ஆதார் அட்டை, சாதிச் சான்றிதழ், கல்வி சான்றிதழ்கள் ஆகியவற்றின் ஜெராக்ஸ் காப்பியை கொடுக்க வேண்டும். பின்பு அந்த விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தகுதியான மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.
புத்தகங்கள் கம்யூட்டர்கள் வழங்கப்படும்
இந்த திட்டத்தின்படி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் கல்லூரிகள், பல்கலைக்கழங்களுக்கு மத்திய அரசு நிதியுதவி வழங்கும். அதாவது மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க தேவையான புத்தகங்கள், பத்திரிகைகள், கற்பித்தல்/கற்றல் உதவி பொருள், கம்ப்யூட்டர்கள், போட்டோகாப்பியர், ஜெனரேட்டர் அல்லது இன்வெர்ட்டர் ஆகியவை வாங்குவதற்காக இந்த திட்டத்துக்காக அதிகப்பட்சம் ரூ.7 லட்சம் வரை சம்பந்தபட்ட கல்லுரிகள்,பல்கலைக்கழங்களுக்கு மத்திய அரசு வழங்கும்.