இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் மற்றும் தகுதி உள்ளவர்கள் தங்களது புகைப்படம், ஆதார் அட்டை நகல் மற்றும் தேர்விற்கு விண்ணப்பித்த விவரங்களுடன் சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை அலுவலக வேலை நாட்களில் நேரில் தொடர்புக் கொள்ளவும்,
மேலும், விவரங்களுக்கு decgc.coachingclass@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம், சென்னை மாவட்டத்தை சேர்ந்த தகுதிவாய்ந்த தேர்வர்கள் இப்பயிற்சிவகுப்பில் சேர்ந்து பயன்பெறுமாறு சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே கேட்டுக்கொண்டுள்ளார்.