Job Vacancy: ரூ.67,000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை.! டிகிரி முடித்துள்ளவர்களுக்கு செம சான்ஸ்.!

Published : Nov 27, 2025, 07:58 AM IST

CSIR - மத்திய மருந்து ஆராய்ச்சி நிறுவனம் (CDRI) 44 Technical Assistant, Technician-1 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது ஒரு நிரந்தர மத்திய அரசு வேலையாகும், தகுதியானவர்கள் 26.12.2025-க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 

PREV
14
திய வேலைவாய்ப்பு அறிவிப்பு

CSIR - Central Drug Research Institute (CDRI), லக்னோவில் 2025க்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Notification No: CDRI/10/2025 ஆக வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பின் மூலம் Technical Assistant – 12, Technician-1 – 32, மொத்தம் 44 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மத்திய அரசு நிரந்தர பணியில் சேர ஆசைபடுபவர்கள் இந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள். விண்ணப்பத்தை 26.12.2025 வரை ஆன்லைனில் சமர்ப்பிக்கலாம்.

24
பணியிட விவரங்கள்

Technical Assistant பணிக்கு B.Sc. 60% மதிப்பெண்களுடன் Life Sciences, Chemistry, Biotechnology, Library Science போன்ற துறைகளில் தகுதி இருந்தால் விண்ணப்பிக்கலாம். பல துறைகளில் அனுபவம் அல்லது Professional Qualification இருந்தால் முன்னுரிமை வழங்கப்படும். Technician-1 பணிக்கு 10th Std மற்றும் ITI சான்றிதழ்/அப்ரென்டிஸ்/துறையைச் சார்ந்த அனுபவம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்று இருந்தால் விண்ணப்பிக்கலாம். Organic Chemistry, Electrical, Refrigeration, Animal Facility, Fire Safety, Photography போன்ற பல பிரிவுகளில் பணியிடங்கள் உள்ளன.

34
வயது வரம்பு, சம்பள விவரம்

வயது வரம்பு

Technical Assistant மற்றும் Technician-1 – அதிகபட்சம் 28 வயது. SC/ST – 5 ஆண்டுகள், OBC – 3 ஆண்டுகள் மற்றும் PwBD, Ex-Servicemen க்கு அரசு விதிப்படி தளர்வு உண்டு.

சம்பள விவரம்

Technical Assistant – சுமார் Rs. 67,530/- Technician-1 – சுமார் Rs. 36,918/-

தேர்வு முறைகள் • எழுத்துத் தேர்வு • Trade Test

விண்ணப்பக் கட்டணம் SC/ST/PwBD/Ex-Servicemen/Women – கட்டணம் இல்லை மற்றவர்கள் – Rs. 500/- (Online Payment)

44
விண்ணப்பிக்கும் முறை

அதிகாரப்பூர்வ இணையதளமான cdri.res.in ஐ சென்று Online Application Form பூர்த்தி செய்ய வேண்டும். விண்ணப்பம் முடியும் வரை செயலில் இருக்கும் மின்னஞ்சல் மற்றும் மொபைல் எண் அவசியம். மத்திய அரசு வேலை நாடுபவர்களுக்கு இது மிக சிறந்த வாய்ப்பு. தகுதி உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்!

விண்ணப்பிக்க கடைசி தேதி – 26.12.2025 

Read more Photos on
click me!

Recommended Stories