நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB), Local Bank Officer பணியிடங்களுக்கு மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கியுள்ளது. டிகிரி முடித்தவர்கள் எளிதாக விண்ணப்பிக்கக்கூடிய இந்த வேலைவாய்ப்பு, மாநில வாரியான உள்ளூர்மொழித் திறனுக்கு முன்னுரிமை வழங்குவதால், குறிப்பாக தமிழகத்திலிருந்து விண்ணப்பிப்போருக்கு தமிழ் மொழி அறிவு ஒரு முக்கிய நிபந்தனையாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பின் படி, மொத்தம் 750 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், பொதுப்பிரிவு – 336, OBC – 194, EWS – 67, SC – 104, ST – 49 என பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 17 மாநிலங்களுக்கு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில், அதிக காலியிடங்கள் மகாராஷ்டிரா (135), குஜராத் (95), தெலுங்கானா (88), அசாம் (86), கர்நாடகா (85) மற்றும் தமிழ்நாடு (85) ஆகிய மாநிலங்களில் காணப்படுகிறது.
விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். உள்ளூர் மொழியில் திறமை வேண்டும். 10ஆம் வகுப்பில் அந்த மாநில மொழியை படித்திருந்தால், தனியாக மொழித் தேர்வு எழுத வேண்டியதில்லை. இல்லை என்றால், மொழித் திறன் தேர்வு கட்டாயமாகும்.