CBSE Recruitment 2026: அட்மிட் கார்டு டவுன்லோட் செய்வது எப்படி? முழு கைடு!

Published : Jan 26, 2026, 10:11 PM IST

CBSE சிபிஎஸ்இ குரூப் A, B, C பணிகளுக்கான தேர்வு வரும் ஜனவரி 31 மற்றும் பிப்ரவரி 1 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. அட்மிட் கார்டு வெளியீட்டு தேதி மற்றும் டவுன்லோட் செய்யும் முறைகளை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

PREV
15
CBSE

மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தில் (CBSE) காலியாக உள்ள குரூப் A, B மற்றும் C பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி, லட்சக்கணக்கான இளைஞர்கள் விண்ணப்பித்திருந்தனர். தற்போது அதற்கான எழுத்துத் தேர்வு நெருங்கிவிட்ட நிலையில், அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் "அட்மிட் கார்டு" (Admit Card) குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

தேர்வு எப்போது? ஹால் டிக்கெட்டை எப்படி பதிவிறக்கம் செய்வது? தேர்வு கூடத்திற்குச் செல்லும் முன் கவனிக்க வேண்டியவை என்ன? விரிவாகப் பார்ப்போம்.

25
1. தேர்வு தேதிகள் குறிச்சுக்கோங்க! (Exam Schedule)

சிபிஎஸ்இ அறிவிப்பின்படி, குரூப் A, B மற்றும் C பணிகளுக்கான தேர்வுகள் இரண்டு நாட்களாகப் பிரிக்கப்பட்டு நடைபெறவுள்ளன.

• தேர்வு நடைபெறும் தேதிகள்: ஜனவரி 31, 2026 (சனிக்கிழமை) மற்றும் பிப்ரவரி 1, 2026 (ஞாயிற்றுக்கிழமை).

• யார் யாருக்கு எப்போது?

o ஜனவரி 31 (காலை): உதவிச் செயலாளர் (Assistant Secretary), உதவிப் பேராசிரியர் (Assistant Professor) உள்ளிட்ட குரூப் A பணிகள்.

o ஜனவரி 31 (மாலை): கணக்கு அதிகாரி (Accounts Officer), ஜூனியர் மொழிபெயர்ப்பு அதிகாரி, கண்காணிப்பாளர் (Superintendent).

o பிப்ரவரி 1 (காலை): ஜூனியர் அக்கவுண்டன்ட் (Junior Accountant), இளநிலை உதவியாளர் (Junior Assistant).

35
2. அட்மிட் கார்டு எப்போது வெளியாகும்?

பொதுவாகத் தேர்வு தேதிக்கு 2 அல்லது 3 நாட்களுக்கு முன்பாகவே முழுமையான அட்மிட் கார்டை சிபிஎஸ்இ வெளியிடும். அதன்படி பார்த்தால், இன்றோ அல்லது நாளையோ (ஜனவரி 26 - 28க்குள்) அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அட்மிட் கார்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய குறிப்பு: ஏற்கனவே "Exam City Intimation Slip" எனப்படும் தேர்வு நகரம் குறித்த அறிவிப்பு வெளியாகிவிட்டது. ஆனால், அது அட்மிட் கார்டு அல்ல. அதில் உங்கள் தேர்வு மையம் (Exam Centre) இருக்காது. விரைவில் வெளியாகவுள்ள அட்மிட் கார்டில் தான் உங்கள் தேர்வு மையம், நேரம் மற்றும் ரோல் நம்பர் ஆகியவை இருக்கும்.

45
3. அட்மிட் கார்டை டவுன்லோட் செய்வது எப்படி? (Step-by-Step Guide)

தேர்வர்கள் கீழ்க்கண்ட எளிய வழிமுறைகளைப் பின்பற்றித் தங்கள் ஹால் டிக்கெட்டைப் பதிவிறக்கம் செய்யலாம்:

1. முதலில் cbse.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.

2. முகப்புப் பக்கத்தில் 'Main Website' அல்லது 'Pariksha Sangam' பகுதிக்குச் செல்லவும்.

3. அங்கே "CBSE Recruitment 2026 - Admit Card for Group A, B & C Posts" என்ற லிங்க் தோன்றும். அதை கிளிக் செய்யவும்.

4. உங்கள் விண்ணப்ப எண் (Application Number) மற்றும் பிறந்த தேதியை (Date of Birth) உள்ளிடவும்.

5. திரையில் தோன்றும் 'Security Pin'-ஐ டைப் செய்து 'Submit' கொடுக்கவும்.

6. இப்போது உங்கள் அட்மிட் கார்டு திரையில் தெரியும். அதை டவுன்லோட் செய்து பிரிண்ட் எடுத்து வைத்துக்கொள்ளவும்.

55
4. தேர்வு மையத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டியவை

தேர்வுக்குச் செல்லும்போது மறக்காமல் கீழ்க்கண்டவற்றை எடுத்துச் செல்லுங்கள்:

• பிரிண்ட் செய்யப்பட்ட அட்மிட் கார்டு (கலர் பிரிண்ட் சிறந்தது).

• அசல் அடையாள அட்டை (Aadhar Card, PAN Card, or Voter ID - Original).

• பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் (தேவைப்பட்டால்).

• நீல அல்லது கருப்பு பால் பாயிண்ட் பேனா.

சிபிஎஸ்இ-யில் பணிபுரிவது என்பது பலரின் கனவு. அந்தக் கனவை நனவாக்கக் கிடைத்துள்ள இந்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். கடைசி நேரத்தில் பதற்றத்தைத் தவிர்க்க, அட்மிட் கார்டு வந்தவுடனேயே டவுன்லோட் செய்துவிடுவது நல்லது.

Read more Photos on
click me!

Recommended Stories