அரசு வேலை தேடுபவர்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் (ஐஆர்சிடிசி) தற்போது 43 Hospitality Monitor பணியிடங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த வேலைக்கான முக்கிய சிறப்பு என்னவென்றால், எழுத்துத் தேர்வு இல்லாமல் நேர்காணல் மூலம் நேரடியாக தேர்வு செய்யப்பட உள்ளது. தகுதி உள்ள இளைஞர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் பயன்படுத்தலாம்.
இந்தப் பதவிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.30,000 சம்பளம் வழங்கப்படும். இத்துடன் சேர்த்து விதிமுறைகளின்படி அலவன்ஸ் மற்றும் பிற சலுகைகளும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹாஸ்பிடாலிட்டி மற்றும் டூரிசம் துறையில் ஆர்வம் உள்ளவர்களுக்கு இது நல்ல தொடக்கமாக அமையலாம்.
விண்ணப்பிக்க விரும்புவோர், அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் இருந்து B.Sc (Hospitality & Hotel Administration) அல்லது BBA/MBA (Culinary Arts) அல்லது B.Sc (Hotel Management & Catering Science) அல்லது MBA (Tourism & Hotel Management) போன்ற பட்டப்படிப்புகளில் ஏதேனும் ஒன்றை முடித்திருக்க வேண்டும். இதற்குப் பிறகும் ஐஆர்சிடிசி குறிப்பிட்டுள்ள தகுதி நிபந்தனைகளை பூர்த்தி செய்வது அவசியம்.