12-ம் வகுப்புக்கு அப்புறம் என்ன? க்யூட் முதல் ஜேஇஇ வரை.. 2026 நுழைவுத் தேர்வுகள் A to Z விபரம் - முழு கைடு!

Published : Jan 04, 2026, 10:07 PM IST

2026 Entrance Exams 2026-ம் ஆண்டிற்கான நீட், ஜேஇஇ, க்யூட் உள்ளிட்ட முக்கிய நுழைவுத் தேர்வுகள் எப்போது? விண்ணப்பிக்கும் முறை மற்றும் தேதிகள் குறித்த முழு விவரம் உள்ளே.

PREV
17
2026 Entrance Exams 12-ம் வகுப்புக்குப் பிறகு என்ன? தயாராகும் மாணவர்கள்!

பள்ளிப் படிப்பை முடிக்கும் தறுவாயில் உள்ள மாணவர்கள், அடுத்து என்ன படிக்கலாம்? எங்குப் படிக்கலாம்? எனத் திட்டமிடத் தொடங்கிவிட்டனர். தமிழ்நாட்டில் கலை, அறிவியல் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கு 12-ம் வகுப்பு மதிப்பெண்கள் போதுமானது என்றாலும், மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவப் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வுகள் கட்டாயம். 2026-27 கல்வி ஆண்டில் கல்லூரியில் காலடி எடுத்து வைக்கவுள்ள மாணவர்களுக்கான முக்கிய நுழைவுத் தேர்வு தேதிகள் மற்றும் விண்ணப்ப விவரங்களை இங்கே காண்போம்.

27
மருத்துவ கனவு... நீட் 2026 (NEET UG) அறிவிப்பு எப்போது?

டாக்டர் ஆகத் துடிக்கும் மாணவர்களுக்கு 'நீட்' (NEET) தேர்வுதான் உயிர்நாடி. எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான இந்தத் தேர்வை தேசிய தேர்வு முகமை (NTA) நடத்துகிறது. 2026-ம் ஆண்டிற்கான பாடத்திட்டம் ஏற்கனவே வெளியாகிவிட்ட நிலையில், தேர்வுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஜனவரி இறுதி அல்லது பிப்ரவரி முதல் வாரத்தில் வெளியாக வாய்ப்புள்ளது. தேர்வு வழக்கம் போல் மே மாதம் நடைபெறலாம்.

• இணையதளம்: https://neet.nta.nic.in/

37
ஐஐடி-யில் சேரத் துடிக்கும் மாணவர்களே... ஜேஇஇ (JEE) அப்டேட்!

மத்திய அரசின் ஐஐடி (IIT), என்ஐடி (NIT) கல்வி நிறுவனங்களில் சேர ஜேஇஇ மெயின் (JEE Main) மற்றும் அட்வாண்ஸ்டு (JEE Advanced) தேர்வுகள் அவசியம்.

• ஜேஇஇ மெயின்: முதல் கட்டத் தேர்வு ஜனவரி 21 முதல் 30 வரை நடைபெறுகிறது. இரண்டாம் கட்டத் தேர்விற்கு ஜனவரி இறுதியில் விண்ணப்பப் பதிவு தொடங்கும்; தேர்வு ஏப்ரல் 2 முதல் 9 வரை நடைபெறும்.

• ஜேஇஇ அட்வாண்ஸ்டு: மெயின் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான இந்தத் தேர்வு மே 17-ம் தேதி நடைபெறும். இதற்கு ஏப்ரல் 23 முதல் விண்ணப்பிக்கலாம்.

• இணையதளம்: https://jeemain.nta.nic.in/

47
மத்திய பல்கலைக்கழகங்களில் படிக்க ஆசையா? க்யூட் (CUET) விவரம் இதோ!

மத்தியப் பல்கலைக்கழகங்களில் கலை மற்றும் அறிவியல் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் எழுத வேண்டியது க்யூட் (CUET) தேர்வு.

• இளநிலை (UG): விண்ணப்பப் பதிவு பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்வு மே மாதம் நடைபெறும்.

• முதுநிலை (PG): முதுகலை படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு ஜனவரி 14 வரை நடைபெறும். தேர்வு மார்ச் மாதம் திட்டமிடப்பட்டுள்ளது.

• இணையதளம்: https://cuet.nta.nic.in/

57
ஃபேஷன் மற்றும் பிட்ஸ் பிலானி படிப்பு... கடைசி தேதி நெருங்குகிறது!

• NIFT 2026: தேசிய ஃபேஷன் தொழில்நுட்ப நிறுவனத்தில் சேர விரும்புவோர் ஜனவரி 6-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு பிப்ரவரி 8-ம் தேதி நடைபெறும்.

• BITSAT 2026: பிர்லா தொழில்நுட்ப நிறுவனத்தில் (BITS) சேர விரும்புவோர் மார்ச் 16, 2026 வரை விண்ணப்பிக்கலாம். தேர்வு இரண்டு கட்டங்களாக (ஏப்ரல் மற்றும் மே மாதங்களில்) நடைபெறும்.

67
டான்செட் மற்றும் முடிவடைந்த தேர்வுகள் - ஒரு பார்வை

தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் எம்.பி.ஏ, எம்.சி.ஏ படிப்புகளுக்கான டான்செட் (TANCET 2026) தேர்வு அறிவிப்பு ஜனவரியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்வு மார்ச் மாதம் நடைபெறலாம்.

77
கிளாட்

இதற்கிடையில், சட்டப் படிப்பிற்கான கிளாட் (CLAT) தேர்வு முடிந்து முடிவுகள் வெளியாகிவிட்டன. அதேபோல் முதுகலை பொறியியலுக்கான கேட் (GATE 2026) விண்ணப்பத் தேதி முடிந்து, தேர்வு பிப்ரவரி 7 முதல் 15 வரை நடைபெறவுள்ளது.

மாணவர்களே, உங்கள் கனவுப் படிப்பிற்கான தேதிகளைக் குறித்து வைத்துக்கொண்டு, இப்போதே தயாராகுங்கள்!

Read more Photos on
click me!

Recommended Stories