அம்பானி பள்ளியில் சீட் வேண்டுமா? எல்.கே.ஜி-க்கே லட்சங்களில் கட்டணம்! பிரமிக்க வைக்கும் வசதிகள் - முழு விவரம்!

Published : Jan 04, 2026, 10:01 PM IST

Ambani School திருபாய் அம்பானி பள்ளியில் உங்கள் குழந்தையைச் சேர்க்க வேண்டுமா? 2026-க்கான கல்விக் கட்டணம், வசதிகள் மற்றும் அட்மிஷன் விவரங்கள் இதோ.

PREV
15
Ambani School மும்பையின் 'ஹாட் டாக்' - அம்பானி பள்ளி ஆண்டு விழா

மும்பையில் உள்ள திருபாய் அம்பானி இன்டர்நேஷனல் பள்ளி (DAIS) எப்போதும் செய்திகளில் இடம்பிடிப்பது வழக்கம். சமீபத்தில் நடைபெற்ற இப்பள்ளியின் ஆண்டு விழா இணையத்தில் வைரலானது. அமிதாப் பச்சன் பேத்தி ஆராத்யா பச்சன் முதல் ஷாருக்கான் மகன் அப்ராம் வரை பல நட்சத்திர வாரிசுகள் இங்குப் படிப்பதால், பாலிவுட் நட்சத்திரங்கள் பலரும் இவ்விழாவில் கலந்துகொண்டனர். ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன், கரீனா கபூர் எனப் பிரபலங்களின் அணிவகுப்பால் பள்ளி விழாவே ஒரு சினிமா விழா போல ஜொலித்தது.

25
பாலிவுட் நட்சத்திரங்களின் முதல் சாய்ஸ் இதுதான்!

ஷாருக்கானின் மகன் அப்ராம், ஷாஹித் கபூர் மற்றும் கரீனா கபூரின் குழந்தைகள், சைப் அலி கான் மகன் இப்ராஹிம் எனப் பாலிவுட் மற்றும் முன்னணி தொழிலதிபர்களின் வாரிசுகள் படிக்கும் இடமாக இப்பள்ளி திகழ்கிறது. பாதுகாப்பான சூழல் மற்றும் உலகத்தரம் வாய்ந்த கல்வி முறை காரணமாகவே, பிரபலங்கள் தங்கள் குழந்தைகளுக்காகக் கண்களை மூடிக்கொண்டு இப்பள்ளியைத் தேர்ந்தெடுக்கின்றனர். இதனால்தான் இங்கு நடக்கும் ஒவ்வொரு நிகழ்வும் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகிறது.

35
மலைக்க வைக்கும் கல்விக் கட்டணம்... நடுத்தர மக்களுக்கு எட்டாக்கனி!

இப்பள்ளியின் கல்விக் கட்டணத்தைப் பார்த்தால் நடுத்தர வர்க்கத்தினர் தலைசுற்றிப் போவார்கள். எல்.கே.ஜி முதல் 7-ம் வகுப்பு வரை ஆண்டுக்குச் சுமார் ரூ.1.70 லட்சம் கட்டணம் வசூலிக்கப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 8 முதல் 10-ம் வகுப்பு வரை ரூ.4.48 லட்சமும், 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்குக் கட்டணம் ரூ.9.65 லட்சம் வரையிலும் வசூலிக்கப்படுகிறது. இது சாதாரணக் குடும்பங்களுக்கு எட்டாத உயரத்தில் உள்ளது.

45
2026 முதல் மாறுதலுக்கு உள்ளாகும் பாடத்திட்டம்

இப்பள்ளியின் சிறப்பம்சமே அதன் சர்வதேச பாடத்திட்டம்தான் (International Curriculum). இங்குப் படிக்கும் மாணவர்கள் IGCSE மற்றும் IBDP பாடத்திட்டங்களுக்குத் தயார்படுத்தப்படுகிறார்கள். முக்கியமாக, ICSE பாடத்திட்டம் படிப்படியாக நிறுத்தப்பட உள்ளது. வரும் 2026 மார்ச் மாதத்துடன் ICSE தேர்வுகள் முடிவடைய உள்ளன. வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி படிக்க விரும்பும் மாணவர்களுக்கு ஏற்ற வகையில் இந்தப் புதிய பாடத்திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

ஏட்டுச் சுரைக்காய் மட்டுமல்ல... முழுமையான வளர்ச்சி!

DAIS பள்ளி வெறும் புத்தகப் படிப்பை மட்டும் ஊக்குவிப்பதில்லை. மாணவர்களின் தகவல் தொடர்புத் திறன், தலைமைப் பண்பு, ஆக்கப்பூர்வமான சிந்தனை மற்றும் குழுவாகச் செயல்படுதல் ஆகியவற்றிலும் கவனம் செலுத்துகிறது. மாணவர் பரிமாற்றத் திட்டங்கள் (Student Exchange Programs) மற்றும் மாணவர்களின் மனநலனில் அக்கறை செலுத்தும் சிறப்புப் பிரிவுகள் இப்பள்ளியை மற்ற பள்ளிகளிலிருந்து தனித்துக்காட்டுகின்றன.

55
இங்குப் படித்த பிரபலங்கள் மற்றும் அட்மிஷன் முறை

பாலிவுட் நடிகைகள் அனன்யா பாண்டே, சாரா அலி கான் மற்றும் ஆர்யன் கான், சுஹானா கான் ஆகியோர் இப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் ஆவர். நீங்களும் உங்கள் குழந்தையை இப்பள்ளியில் சேர்க்க விரும்பினால், dais.edu.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories