லைஃப் செட்டில் ஆகணுமா? 2026-ல் கனடா பறக்க ரெடியாகுங்க.. எம்பிஏ படிப்புக்கு இவ்வளவு மவுசா?

Published : Jan 04, 2026, 09:54 PM IST

MBA கனடாவில் MBA படிக்க வேண்டுமா? 2026-ஆம் ஆண்டிற்கான கல்விக் கட்டணம், தகுதி, டாப் பல்கலைக்கழகங்கள் மற்றும் விசா நடைமுறைகள் குறித்த முழு விவரங்கள் இதோ.

PREV
16
MBA கனவு தேசத்தில் ஒரு 'மேனேஜ்மென்ட்' படிப்பு

சர்வதேச அளவில் வேலைவாய்ப்பைப் பெறத் துடிக்கும் மாணவர்களுக்கு, கனடாவில் எம்பிஏ (MBA) படிப்பது ஒரு மிகச்சிறந்த தேர்வாகும். உலகத்தரம் வாய்ந்த கல்வி, பல நாட்டு மாணவர்களுடன் பழகும் வாய்ப்பு மற்றும் படிப்பு முடித்தவுடன் அதிக சம்பளத்தில் வேலை ஆகியவை கனடாவை மேலாண்மைப் படிப்புகளுக்கான முதன்மை இடமாக மாற்றியுள்ளன. 2026-ல் கனடாவில் எம்பிஏ படிக்கத் திட்டமிடுபவர்களுக்கான விரிவான தகவல்களை இங்கே காண்போம்.

26
எம்பிஏ படிப்பு ஏன் முக்கியம்? அது தரும் வாய்ப்புகள் என்ன?

எம்பிஏ (Master of Business Administration) என்பது உலகம் முழுவதும் அங்கீகரிக்கப்பட்ட ஒரு முதுகலை பட்டப்படிப்பாகும். இது மாணவர்களிடம் தலைமைத்துவப் பண்பு, வியூகம் அமைத்தல் (Strategic Thinking) மற்றும் வணிகத் திறன்களை வளர்க்கிறது. இந்தப் படிப்பை முடிப்பவர்களுக்கு கன்சல்டிங், ஃபைனான்ஸ், டெக்னாலஜி மற்றும் மார்க்கெட்டிங் போன்ற துறைகளில் உயர் பதவிகள் காத்திருக்கின்றன.

36
விண்ணப்பிக்கத் தேவையான தகுதிகள் மற்றும் நுழைவுத் தேர்வுகள்

கனடாவில் எம்பிஏ படிக்க விரும்பினால், முதலில் இளங்கலைத் தேர்ச்சி (Bachelor's Degree) பெற்றிருக்க வேண்டும். முன்னணி கல்லூரிகள் பொதுவாக 2 முதல் 5 ஆண்டுகள் பணி அனுபவத்தை (Work Experience) எதிர்பார்க்கின்றன. மேலும், சர்வதேச மாணவர்கள் GMAT அல்லது GRE மதிப்பெண்களுடன், ஆங்கிலப் புலமையை நிரூபிக்க IELTS அல்லது TOEFL தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

46
டாப் பல்கலைக்கழகங்கள் மற்றும் படிப்பு காலம்

கனடாவில் எம்பிஏ படிப்பின் காலம் பல்கலைக்கழகத்தைப் பொறுத்து 12 முதல் 20 மாதங்கள் வரை மாறுபடும். டொராண்டோ பல்கலைக்கழகத்தின் ரோட்மேன் (Rotman), மெக்கில் பல்கலைக்கழகத்தின் டெசாடெல்ஸ் (Desautels), யுபிசி சாடர் (UBC Sauder) மற்றும் யார்க் பல்கலைக்கழகத்தின் ஸ்கூலிச் (Schulich) ஆகியவை உலகத் தரவரிசையில் இடம்பிடித்த டாப் பிசினஸ் ஸ்கூல்கள் ஆகும்.

56
கல்விக் கட்டணம் மற்றும் வாழ்க்கைச் செலவுகள் எவ்வளவு?

கல்விக் கட்டணம் பல்கலைக்கழகத்திற்கு ஏற்ப மாறுபடும். முன்னணி பல்கலைக்கழகங்களில் எம்பிஏ படிக்க சுமார் 30 முதல் 55 லட்சம் ரூபாய் வரையும், நடுத்தர வகைக் கல்லூரிகளில் 25 முதல் 35 லட்சம் ரூபாய் வரையும் செலவாகலாம். டொராண்டோ போன்ற பெருநகரங்களில் தங்குமிடம் மற்றும் இதர வாழ்க்கைச் செலவுகளுக்காக ஆண்டுக்கு 12 முதல் 18 லட்சம் ரூபாய் வரை தேவைப்படலாம்.

66
படிப்பிற்குப் பின் வேலை.. ரூ.90 லட்சம் சம்பளம்.. 3 ஆண்டு விசா!

எம்பிஏ முடித்தவர்களுக்கு கனடாவில் கன்சல்டிங், சுகாதாரம், தொழில்நுட்பம் மற்றும் நிதித்துறையில் அதிக வேலைவாய்ப்புகள் உள்ளன. ஆண்டுக்குச் சராசரியாக 60 முதல் 90 லட்சம் ரூபாய் வரை சம்பளம் பெற முடியும். எல்லாவற்றிற்கும் மேலாக, படிப்பை முடித்த பிறகு கனடாவில் வேலை தேட 3 ஆண்டுகள் வரை 'Post-Study Work Visa' வழங்கப்படுவது இந்திய மாணவர்களுக்குக் கிடைத்த வரப்பிரசாதமாகும்.

Read more Photos on
click me!

Recommended Stories