ஆடை இல்லாத மனிதன் அரை மனிதன் என்னும் காலம் போய், ஆதார் இல்லாத மனிதன் அரை மனிதன் என்னும் அளவிற்கு அதன் பயன்பாடு அதிகரித்துவிட்டது. அதோடு இந்த பான் கார்டையும் சேர்த்துக்கொள்ளுங்கள். இந்த இரு கார்டுகளும் இல்லாவிட்டால் நாட்டில் பெரும்பானா சேவைகளை பெற இயலாத நிலையே உள்ளது. வங்கிக்கணக்கு தொடங், அரசு சேவைகளை பெற, மத்திய மாநில அரசின் நலத்திட்ட உவிகளை பெற, ITR தாக்கல் செய்ய என பலசேவைகளுக்கும் இந்த இரு கார்டுகள் இன்றியமையாததாக உள்ளது.