தங்கத்தின் மீதான வரி குறைப்புக்கு பிறகு பொதுமக்கள் தங்கத்தை வாங்க ஆர்வம் கேட்டு வருகின்றனர். இந்த நிலையில் பிரபல பொருளாதார ஆலோசகர் ஆனந்த் சீனிவாசன் முக்கிய செய்தியை கூறியுள்ளார்.
2024ம் ஆண்டின் மத்திய பட்ஜெட்டுக்கு பிறகு தங்கத்தின் விலை தொடர் சரிவை கண்டது. தங்கத்தின் மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டுள்ளதால், சமீப காலமாக தங்கத்தின் விலை தொடர் வீழ்ச்சியை கண்டு வருகிறது. நம் இந்திய சந்தையில் தங்கத்தின் விலை குறைந்துள்ளதால் தங்கம் வாங்க மக்களும் குவிந்தனர்.
24
Anand Srinivasan
தொடர்ந்து தங்கம் வாங்குபர்கள் அதிகரித்து வருகிறார்கள் என்று கூறப்படுகிறது. சில நாட்களில் தங்கத்தின் விலை கணிசமாக அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் பலரும் தங்கம் வாங்கலாமா? அல்லது வேண்டாமா? என்று யோசித்து வருகிறார்கள். இந்த நிலையில் பிரபல பொருளாதார ஆலோசகர் ஆனந்த் சீனிவாசன் முக்கிய தகவலை கூறியுள்ளார்.
34
Gold Price
ஆனந்த் சீனிவாசன் வெளியிட்டுள்ள வீடியோவில், தங்கத்தின் விலை தற்போது பெரிதாக ஏறவில்லை. இந்த ஆண்டு தொடக்கம் முதலே 15 முதல் 20 சதவீதம் வரை லாபம் கொடுத்தது. விரைவில் தங்கத்தின் விலை கீழே போக வாய்ப்புள்ளது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.6000க்கு கீழே இறங்க வாய்ப்பு உள்ளது.
44
Gold Price Moment
தங்கத்தின் விலை குறையும் போது, அதனை பலரும் வாங்க முற்படுவார்கள். அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தைக் குறைக்கும் போதும் தங்கம் விலை நிச்சயம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கலாம். வரும் செப்டெம்பர் மாதம் மேல் அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதம் குறைத்தால், தங்கத்தின் விலை நிச்சயம் அதிகரிக்கலாம்” என்று கூறியுள்ளார்.