நாட்டில் அதிக கட்டணம் வசூலித்த டாப் 10 சுங்கச்சாவடிகள்.. தமிழ்நாட்டின் இந்த டோல் பிளாசாவும் லிஸ்ட்ல இருக்கு!

First Published | Aug 10, 2024, 9:09 AM IST

நாட்டில் அதிக கட்டணம் வசூலிக்கும் டாப் 10 சுங்கச்சாவடிகளைப் பற்றி உங்களுக்கு தெரியுமா? இதுகுறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறையின் கூற்றுப்படி, நாட்டின் தேசிய நெடுஞ்சாலைகளில் 983 சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வருகின்றன. நாட்டில் அதிகமாக வசூலிக்கும் டாப் 10 சுங்கச்சாவடிகளைப் பற்றி உங்களுக்கு தெரியுமா? 2024ஆம் நிதியாண்டில், இந்த 10 தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் இருந்து வசூலான பணம் 3300 கோடி ரூபாய் ஆகும். இந்த 10 சுங்கச்சாவடிகளில் இருந்து கடந்த 5 ஆண்டுகளில் இருந்து இந்த ஆண்டு மார்ச் 31-ம் தேதி வரை வசூலான தொகை 14,045 கோடி ரூபாய் என மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை தெரிவித்துள்ளது.

toll plaza

சசரம் டோல் பிளாசா:

பீகாரின் சசரம் சுங்கச்சாவடி இந்தப் பட்டியலில் 10வது இடத்தைப் பிடித்துள்ளது. 900 கிமீ தொலைவுள்ள வாரணாசி-அவுரங்காபாத் வழித்தடத்தில் இந்த சுங்கச்சாவடியில் கடந்த 5 ஆண்டுகளில் வசூலான பணம் 2043.8 கோடி ரூபாய் ஆகும்.

Tap to resize

நவாப்கஞ்ச் டோல் பிளாசா:

உத்தரப் பிரதேசத்தில் உள்ள நவாப்கஞ்ச் சுங்கச்சாவடி  இந்தப் பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது. இந்த சுங்கச்சாவடியில் கடந்த ஐந்து ஆண்டுகளில் 1884.5 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.

Toll Plaza

கிருஷ்ணகிரி தோப்பூர் சுங்கச்சாவடி:

தமிழ்நாட்டின் தர்மபுரியில் உள்ள இந்த சுங்கச்சாவடி நாட்டில் அதிக வசூல் செய்த சுங்கச்சாவடிகள் பட்டியலில் 8-வது இடத்தில் உள்ளது. இந்த சுங்கச்சாவடியில் கடந்த ஐந்தாண்டுகளில் வசூலான கட்டணம் 1124.2 கோடி ரூபாய் ஆகும்

திகாரியா/ஜெய்ப்பூர் சுங்கச்சாவடி :

ராஜஸ்தானின் திகாரியா-ஜெய்பூர் சுங்கச்சாவடி இந்த பட்டியலில் 7வது இடத்தைப் பிடித்துள்ளது. இங்கு கடந்த ஐந்தாண்டுகளில் வசூலான கட்டணம் 1161.2 கோடி ரூபாய் ஆகும்.

சோர்யாசி சுங்கச்சாவடி

குஜராத்தில் உள்ள இந்த சுங்கச்சாவடி  6வது இடத்தில் உள்ளது. பருச் மற்றும் சூரத் இடையேயான 246 கி.மீ தூரத்திற்கு இந்த சுங்கச்சாவடியில் 1272.6 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.

Toll plaza

கராண்டா டோல் பிளாசா:

ஹரியானாவில் உள்ள கராண்டா டோல் பிளாசா 111.5 கிமீ பானிபட்-ஜலந்தர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இந்த சுங்கச்சாவடியில் கடந்த ஐந்து ஆண்டுகளில் ரூ.1314.4 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது.

Panniyankara toll plaza

பரஜோர் சுங்கச்சாவடி :

இது உத்தரபிரதேசத்தில் உள்ள சுங்கச்சாவடி. எட்டாவாவை சாகேரியுடன் இணைக்கிறது. இந்த சுங்கச்சாவடியில் கடந்த ஐந்து ஆண்டுகளில் இங்கு வசூலான தொகை 1480.7 கோடி ரூபாய்.

toll plaza

ஜலதுலகோரி சுங்கச்சாவடி :

மேற்கு வங்கத்தில் உள்ள ஜலதுலகோரி சுங்கச்சாவடி மிகவும் பிரபலமானது, இது வெறும் 35 கிலோமீட்டர் தூரம் மட்டுமே உள்ளது மற்றும் கடந்த ஐந்து ஆண்டுகளில் 1538.9 கோடிகளை வசூலித்துள்ளது.

ஷாஜஹான்பூர் டோல் பிளாசா:

ஷாஜஹான்பூர் டோல் பிளாசா ராஜஸ்தானில் குர்கான்-கோடாபுட்லி-ஜெய்பூர் இடையே 115 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. கடந்த ஐந்தாண்டுகளில் இந்த சுங்கச்சாவடியில் இருந்து வசூலான தொகை 1884.5 கோடி ரூபாய்.

பெர்தானா சுங்கச்சாவடி :

குஜராத்தில் அமைந்துள்ள பெர்தானா சுங்கச்சாவடி 1வது இடத்தில் உள்ளது. இங்கிருந்து அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கடந்த ஐந்தாண்டுகளில் இங்கிருந்து வசூலான தொகை 2043.8 கோடி ரூபாய் ஆகும்.

Latest Videos

click me!