மார்ச் 31க்கு முன்.. இந்த 5 வேலைகளை முடிங்க.. இல்லைனா அபராதம் விதிக்கப்படும்

Published : Mar 30, 2026, 04:45 PM IST

மார்ச் 31, 2025-26 நிதியாண்டின் கடைசி நாளாகும், இது வரி செலுத்துவோர், ஊழியர்கள் மற்றும் தொழில்முனைவோருக்கு முக்கியமானது. தவறினால், அதிக TDS பிடித்தம் மற்றும் அபராதங்களை சந்திக்க நேரிடலாம்.

PREV
15
மார்ச் 31 கடைசி நாள்

மார்ச் 31 என்பது சாதாரண தேதியல்ல. 2025–26 நிதியாண்டின் கடைசி நாள். இந்த நாளுக்குள் சில முக்கிய பணிகளை முடிக்காதவர்கள் கூடுதல் வரி செலுத்த வேண்டிய நிலையும் அபராதங்களும் சந்திக்க நேரிடலாம். குறிப்பாக ஊழியர்கள், தொழில் முனைவோர், வரி செலுத்துபவர்கள் அனைவருக்கும் இந்த தேதி மிகவும் முக்கியமானது.

25
செய்ய வேண்டிய முக்கிய பணிகள்

பழைய வரி முறையை தேர்வு செய்தவர்கள், வரிச்சலுகை பெறும் முதலீடுகளை மார்ச் 31க்குள் முடிக்க வேண்டும். PPF, SSY, NPS போன்ற திட்டங்களில் முதலீடு செய்தால் Section 80C கீழ் கழிவுகள் கிடைக்கும். இந்தத் தேதியைத் தவறவிட்டால் அந்த முதலீடுகள் அடுத்த நிதியாண்டுக்கே கணக்கில் சேரும்.

35
மார்ச் 31 கடைசி வாய்ப்பு

ஊழியர்கள் தங்கள் நிறுவனங்களுக்கு முதலீட்டு ஆதார ஆவணங்களை (சான்று) சமர்ப்பிக்க வேண்டும். இதை நேரத்திற்குள் செய்யாவிட்டால், கடைசி மாத சம்பளத்தில் அதிக TDS பிடித்தம் செய்யப்படும். மேலும், 2021–22 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரி (ITR) தவறுகள் இருந்தால், ITR-U மூலம் திருத்திக்கொள்ள மார்ச் 31 கடைசி வாய்ப்பு.

45
வரிச்சலுகை பெற முதலீடு செய்யும் கடைசி தேதி

பங்குச்சந்தை அல்லது மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு செய்தவர்கள், மூலதன ஆதாயங்கள் கணக்கை சரி பார்க்க வேண்டும். பழைய இழப்புகளை பயன்படுத்தி வரிச்சுமையை குறைக்கும் வரி இழப்பு அறுவடை முறையைப் பயன்படுத்தலாம். தொழில் முனைவோருக்கு, தேய்மான சலுகை பெற, வாங்கிய இயந்திரங்கள் மார்ச் 31க்குள் பயன்பாட்டில் இருக்க வேண்டும்.

55
மார்ச் 31 கடைசி வாய்ப்பு

GST தொடர்பான பணிகளையும் கவனிக்க வேண்டும். GSTR-1 மற்றும் GSTR-3B விவரங்கள் கணக்குப்பதிவுடன் ஒப்பிட்டு தவறுகள் இருந்தால் திருத்தப்பட வேண்டும். ITC விவரங்கள் சரிபார்த்து தவறான வரவுகள் இருந்தால் நீக்க வேண்டும். ஏற்றுமதியாளர்கள் புதிய LUT தாக்கல் செய்யவும், ரூ.5 கோடிக்கு மேல் வருவாய் உள்ளவர்கள் e-invoice தயாராக இருக்கவும் அவசியம். இந்த அனைத்தையும் நேரத்தில் முடித்தால் உங்கள் நிதி திட்டம் பாதுகாப்பாக இருக்கும்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories