உலகின் மிகப்பெரிய பணக்கார அரசியல்வாதி இவர் தான்! அம்பானியை விட அதிக சொத்து இருக்கு!

First Published | Nov 11, 2024, 12:19 PM IST

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் சொத்து மதிப்பு குறித்து இந்த பதிவில் ஆடம்பர மாளிகைகள், கார்கள், விமானங்கள் மற்றும் சொகுசு படகு என பல கோடி சொத்துக்களை அவர் வைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Richest Politician

உலகின் மிகப் பெரிய பணக்காரர்கள் என்றாலே எலோன் மஸ்க், ஜெஃப் பெசோஸ் மற்றும் மார்க் ஜுக்கர்பெர்க் போன்றவர்களின் பெயர் நம் நினைவுக்கு வரும். இந்தியாவை பொறுத்த வரை, முகேஷ் அம்பானி, கௌதம் அதானி மற்றும் ஷிவ் நாடார் போன்ற பெயர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளன. ஆனால் இன்று நாம் செல்வத்தில் அனைவரையும் மிஞ்சும் ஒருவரைப் பற்றி பார்க்கலாம்.

Richest Politician

அவர் வேறு யாருமில்லை, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின். அவரின் சொத்து மதிப்பு சுமார் 200 பில்லியன் டாலர்கள் ஆகும். அதாவது இந்திய மதிப்பில் ரூ.16,71,877 கோடி. சுவாரஸ்யமாக, புடினின் அதிகாரப்பூர்வ வருவாய் $140,000 அதாவது சுமார் ரூ. 1 கோடி) தான் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் அவரது செழுமையான வாழ்க்கை முறை அதிக செல்வத்தை குறிக்கிறது.

Latest Videos


Richest Politician

800 சதுர அடி அபார்ட்மெண்ட், மூன்று கார்களின் உரிமையை புடின் பகிரங்கமாக கூறுகிறார். ஆனால் அவரது உண்மையான சொத்துக்கள் மிகவும் ஆடம்பரமானவை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இவற்றில் பிரபலமான கருங்கடல் மாளிகை, என்றும் பிரம்மாண்ட அரண்மனையையும் புடின் வைத்திருக்கிறார். 19 பிற சொத்துக்கள், 700 கார்கள், 58 விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மற்றும் "தி ஃப்ளையிங் கிரெம்ளின்" என்று அழைக்கப்படும் 716 மில்லியன் டாலர் தனியார் ஜெட் விமானத்தையும் வைத்திருப்பதாக கூறப்படுகிறது. புடின் 700 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஷெஹெராசாட் என்ற சொகுசு படகு ஒன்றையும் வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

Richest Politician

ஆடம்பர கடிகாரங்கள் மீதான அவரது ஆர்வத்திற்கு பெயர் பெற்ற புடினின் சேகரிப்பில் 60,000 படேக் பிலிப் பெர்பெச்சுவல் காலண்டர் மற்றும் $500,000 மதிப்புள்ள A. Lange & Sohne Tourbograph போன்ற விலை உயர்ந்த ஆடம்பர பொருட்கள் உள்ளன.

விளாடிமிர் புடின் 1999 முதல் ரஷ்யாவில் தலைமைப் பாத்திரங்களை வகித்து வருகிறார், ஜனாதிபதி அல்லது பிரதம மந்திரியாக பணியாற்றினார். அவர் கேஜிபியின் வெளிநாட்டு உளவுத்துறை அதிகாரியாக 16 ஆண்டுகள் செலவிட்டார், ஜோசப் ஸ்டாலினுக்குப் பிறகு ரஷ்யாவின் நீண்ட காலம் பணியாற்றிய தலைவராக புடின் திகழ்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

click me!