தங்கத்தின் மீது மக்கள் ஆர்வம்
தங்கம் மற்றும் நிலத்தில் முதலீடு செய்ய மக்கள் அதிகளவு விரும்புவார்கள். இதற்கு காரணமாக எப்போதும் நஷ்டம் ஏற்படாது என்ற காரணம் ஒன்று தான். மேலும் தங்களது குழந்தைகளுக்கு எதிர்கால தேவைகளுக்காகவும், திருமணம் போன்ற சுப நிகழ்வுகளுக்காகவும் தங்கம் உள்ளிட்ட ஆபரணங்களை சேமிப்பார்கள். அந்த வகையில் உலகத்திலையே அதிகளவு தங்கம் வாங்கும் நாடாக இந்தியா உள்ளது.