ரூ.42,000 சேமிக்க உதவும் ஸ்விக்கி ஹெச்டிஎஃப்சி கிரெடிட் கார்டு! இப்போது முற்றிலும் இலவசம்!

First Published | Nov 11, 2024, 10:01 AM IST

ஹெச்டிஎஃப்சி வங்கியின் Swiggy HDFC கிரெடிட் கார்டு ஆண்டுக்கு ரூ.42,000 வரை சேமிக்க உதவும். குறிப்பிட்ட காலத்திற்கு இது இலவசமாக வழங்கப்படுகிறது.

Swiggy HDFC Bank Credit Card

நீங்கள் உணவுப் பிரியரா, ஆன்லைனில் உணவு மற்றும் மளிகைப் பொருட்களைப் ஆர்டர் செய்து பெறுகிறீர்களா? அப்படியானால், 10% கேஷ்பேக் பெற சூப்பரான வாய்ப்பு ஒன்று இருக்கிறது.

Swiggy HDFC Bank Credit Card

ஹெச்டிஎஃப்சி வங்கியின் Swiggy HDFC கிரெடிட் கார்டு ஆண்டுக்கு ரூ.42,000 வரை சேமிக்க உதவும். பண்டிகை காலச் சலுகையின் ஒரு பகுதியாக, இந்த கிரெடிட் கார்டு ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு வாழ்நாள் முழுவதும் இலவசமாக வழங்கப்படுகிறது.

Tap to resize

Swiggy HDFC Bank Credit Card

தற்போது இந்த கிரெடிட் கார்டு வாங்குவதற்கு கட்டணம் அல்லது வருடாந்திர கட்டணம் இல்லை. வரும் டிசம்பர் 31ஆம் தேதி வரை HDFC வங்கியின் டிஜிட்டல் தளங்கள் மூலமாகவும் நேரிலும் இதற்காக விண்ணப்பிக்கலாம். இந்த கார்டைப் பெற விரும்பினால், ஆஃபர் காலத்தில் விண்ணப்பிக்க வேண்டும். ஏற்கனவே Swiggy HDFC கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு இந்தச் சலுகை பொருந்தாது.

கூடுதல் பலனாக, இந்த கார்டு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் Swiggy One இன் 3 மாத இலவச சந்தாவைப் பெறுவார்கள். ஸ்விக்கி ஒன் உறுப்பினர்கள் ஆர்டர்களுக்கு இலவச டெலிவரியைப் பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Swiggy HDFC Bank Credit Card

ஸ்விக்கி மூலம் ஏதாவது ஆர்டர் செய்து இந்த கார்டு மூலம் பணம் செலுத்தினால், அவர்களுக்கு 10% கேஷ்பேக் கிடைக்கும். இந்த வகையில், ஒவ்வொரு மாதமும் ரூ.1500 வரை கேஷ்பேக் கிடைக்கும்.

இந்த கார்டு மூலம், Amazon, Flipkart, Nyaka, Ola, Uber உள்ளிட்ட நூற்றுக்கணக்கான இ-காமர்ஸ் தளங்களில் ஆர்டர் செய்யும் போது 5% கேஷ்பேக் கிடைக்கும். இந்த வகையில், ஒவ்வொரு மாதமும் ரூ.1500 வரை கேஷ்பேக் பெறலாம்.

Swiggy HDFC Bank Credit Card

இது தவிர, வாடிக்கையாளர்கள் மற்ற அனைத்து செலவுகளிலும் 1 சதவீதம் கேஷ்பேக் பெறலாம். இந்த வகையில், ஒவ்வொரு மாதமும் ரூ.500 வரை கேஷ்பேக் கிடைக்கும்.

வாடகை செலுத்துதல், EMI பரிவர்த்தனைகள் போன்றவற்றில் இந்த கார்டு மூலம் கேஷ்பேக் கிடைக்காது.

இந்த கார்டில் காண்டாக்ட்லெஸ் தொழில்நுட்பம் உள்ளது. கார்டை ஸ்வைப் செய்யாமல் பிஓஎஸ் இயந்திரத்தில் கார்டை லேசாகத் தட்டுவதன மூலம் பணம் செலுத்தலாம்.

Latest Videos

click me!