8.29 லட்சம் கோடி நன்கொடை வழங்கிய ஜாம்செட்ஜி டாடா
ஜாம்செட்ஜி டாடாவின் தொண்டு நன்கொடைகள் இன்றைய கோடீஸ்வரர்களாக இருக்கும் முகேஷ் அம்பானி, கௌதம் அதானி, அசிம் பிரேம்ஜி மற்றும் ஷிவ் நாடார் போன்ற மற்ற பரோபகாரர்களை விட அதிகமாக உள்ளது. சு
காதாரம் மற்றும் கல்வி ஆகிய துறைகளில் அவர் நிறுவிய நிறுவனங்கள் லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. ஜாம்செட்ஜி டாடா வழங்கிய நன்கொடைகள் இந்த துறைகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் மூலம் அவர் உலகின் மிகப்பெரிய பரோபகராக மாற்றியது. அவரது பங்களிப்புகள் இந்தியா முழுவதும் தொடர்ந்து எதிரொலிக்கிறது.
ஜாம்செட்ஜி டாடா: டாடா குழுமத்தின் நிறுவனர்
ஜாம்செட்ஜி டாடாவின் பயணம் 1868 இல் அவர் டாடா குழுமத்தை நிறுவியபோது தொடங்கியது. ஒரு சாதாரண முயற்சியாகத் தொடங்கிய இந்த முயற்சி, இந்தியாவின் மிகப் பெரிய, மதிப்புமிக்க நிறுவனமாக வளர்ந்துள்ளது, அதன் மதிப்பு சுமார் 24 லட்சம் கோடி ரூபாய்.