தற்போது ரிசர்வ் வங்கி குறைந்தபட்ச இருப்புத் தொகை பராமரிப்பு குறித்துப் புதிய விதிமுறைகளை அமல்படுத்த உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய விதிமுறைகள் அமலுக்கு வருமா அல்லது தற்போதைய விதிமுறைகளில் மாற்றங்கள் செய்யப்படுமா என்பது வரும் நாட்களில் தெரியவரும். எஸ்பிஐ அனைத்து வகையான கணக்குகளுக்கும் பூஜ்ஜிய இருப்பு (ஜீரோ பேலன்ஸ்) கணக்குகளை வழங்குகிறது. இதன் மூலம் குறைந்தபட்ச இருப்புத் தொகையைப் பராமரிக்காவிட்டாலும் எந்த அபராதமும் விதிக்கப்படாது. யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா பூஜ்ஜிய இருப்பு கணக்குகளை வழங்குகிறது. இருப்பினும், குறைந்தபட்ச இருப்புத் தொகை கணக்குகளையும் ஊக்குவிக்கிறது. இந்தக் கணக்குகளைத் திறக்கும்போது காசோலை பெற்றால், குறைந்தபட்ச இருப்புத் தொகையாக ரூ.250, ரூ.500, ரூ.1000 ஆகியவற்றைப் பராமரிக்க வேண்டும். கணக்கு திறக்கும்போது காசோலை புத்தகம் பெறவில்லை என்றால், ரூ.100, ரூ.250, ரூ.500 ஆகியவற்றைப் பராமரிக்க வேண்டும்.