ரூ.5000 மட்டும் முதலீடு செய்தால் போதும்! நீங்களும் லட்சாதிபதி ஆகலாம்!

Published : Oct 05, 2024, 11:56 AM IST

போஸ்ட் ஆபிஸ் RD சிறு சேமிப்புத் திட்டத்தில் 6.7 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. இதில் முதலீடு செய்வதற்கான முதிர்வு காலம் ஐந்து ஆண்டுகள். இத்திட்டத்தில் சேர்ந்து லட்சாதிபதி ஆவது எப்படி என்று தெரிந்துகொள்ளலாம்.

PREV
17
ரூ.5000 மட்டும் முதலீடு செய்தால் போதும்! நீங்களும் லட்சாதிபதி ஆகலாம்!
Post office RD Scheme

போஸ்ட் ஆபிஸ் சிறுசேமிப்புத் திட்டங்கள் பாதுகாப்பான முதலீடு மற்றும் சிறந்த வருமானம் அளிக்கின்றன. லட்சாதிபதிகளை உருவாக்கும் திட்டமான போஸ்ட் ஆபிஸ் ஆர்டி திட்டமும் பிரபலமான திட்டங்களில் ஒன்று. இதில் ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்வதன் மூலம், 10 ஆண்டுகளில் ரூ.8 லட்சத்திற்கும் அதிகமான நிதியைச் சேர்க்கலாம்.

27
Post office recurring deposit interest rate

குழந்தைகள், பெரியவர்கள், சிறியவர்கள் என ஒவ்வொரு வயதினருக்கும் ஏற்ப சேமிப்புத் திட்டங்கள் தபால் நிலையத்தில் உள்ளன. போஸ்ட் ஆபிஸ் தொடர் வைப்புநிதி திட்டம் (Recurring Deposit Scheme) பாதுகாப்பான முதலீட்டுக்கான தேர்வாக உள்ளது. இந்தத் திட்டத்தில் முதிர்வு காலம் 5 ஆண்டுகள். 10 ஆண்டுகளாக நீட்டிக்க முடியும். கடந்த 2023ஆம் ஆண்டிலேயே, இத்திட்டத்தில் முதலீடு செய்வதற்கான வட்டி விகிதம் 6.5% லிருந்து 6.7% ஆக உயர்த்தப்பட்டது.

37
RD account

அருகிலுள்ள எந்த தபால் அலுவலகத்திற்கும் சென்று ரிக்கரிங் டெபாசிட் திட்டத்தில் கணக்கைத் தொடங்கலாம். 100 ரூபாயில் இருந்து முதலீடு செய்யத் தொடங்கலாம். அதே சமயம் அதிகபட்ச முதலீட்டிற்கு வரம்பு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. இந்தத் திட்டத்தில் மைனர் பெயரிலும் கணக்கு தொடங்கலாம். ஆனால், பெற்றோர் அல்லது பாதுகாவலரின் பெயர் மற்றும் ஆவணத்தையும் பதிவுசெய்ய வேண்டும்.

47
RD benefits

நீங்கள் போஸ்ட் ஆபிஸ் ஆர்டி திட்டத்தில் கணக்கைத் தொடங்கி, சில பிரச்சனைகளால் அதை மூட நினைத்தால், அதற்கும் வாய்ப்பு உள்ளது. முதிர்வு காலம் முடிவதற்கு முன்பே கணக்கை மூடும் வசதியும் உண்டு. இந்தத் திட்டத்தில் செய்திருக்கும் முதலீட்டை வைத்து கடன் பெறவும் முடியும். ஆனால், கணக்கு தொடங்கி ஓராண்டு முதலீடு செய்த பிறகு, டெபாசிட் செய்த மொத்த தொகையில் 50 சதவீதம் அளவுக்கு கடனாகப் பெறலாம். இந்தக் கடனுக்கு டெபாசிட் வட்டி விகிதத்தை விட இது 2 சதவீதம் அதிகமாகச் செலுத்த வேண்டும்.

57
RD in 5 years

போஸ்ட் ஆஃபீஸ் ஆர்டியில் முதலீடு மற்றும் வட்டியைக் கணக்கிட்டு, ஒவ்வொரு மாதமும் ரூ. 5,000 முதலீடு செய்து, முதிர்வுக் காலத்தில், அதாவது 5 ஆண்டுகளில், மொத்தம் ரூ.3,56,830 ஈட்டலாம். இதில் 3 லட்சம் ரூபாய் மொத்த டெபாசிட் செய்த தொகையும் 6.7% வீதம் கிடைத்த ரூ.56,830 வட்டியும் அடங்கும்.

67
RD in 10 years

5 ஆண்டுகளுக்குப் பின் சேர்ந்திருக்கும் ரூ.3,56,830 தொகையை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு முதலீடு செய்து லாபத்தைப் பெருக்கலாம். முதிர்வுக் காலத்தின்போது, இத்திட்டத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நீடித்தால், 10 ஆண்டுகளில் டெபாசிட் செய்த தொகை ரூ.6,00,000 ஆக இருக்கும். இதனுடன், 6.7 சதவீதம் வட்டித் தொகை ரூ.2,54,272 சேரும். இதன்படி, 10 ஆண்டுகளில் டெபாசிட் 6 லட்சம் ரூபாய் பணம், 8.5 லட்சத்துக்கு மேல் உயர்ந்துவிடும். அதாவது 10 வருடம் கழித்து ரூ.8,54,272 கிடைக்கும்.

77
RD TDS rules

போஸ்ட் ஆஃபீஸ் ஆர்டி திட்டங்களின் மூலம் ஈட்டப்படும் வட்டியில் டிடிஎஸ் கழிக்கப்படும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். முதலீட்டாளர் வருமானவரி தாக்கல் செய்யபோது, இத்தொகையைத் திருப்பியளிக்கக் கோரி, மீண்டும் பெற்றுக்கொள்ளலாம். RD இல் கிடைக்கும் வட்டிக்கு 10 சதவீதம் TDS விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், வட்டி 10,000 ரூபாய்க்கு மேல் இருந்தால்தான் TDS கழிக்கப்படும்.

Read more Photos on
click me!

Recommended Stories