Business: தொழில் தொடங்கும் பெண்களுக்கு ஜாக்பாட்.! ரூ.2 லட்சம் மானியத்துடன் சுளையா ரூ. 10 லட்சம் கடனுதவி.!

Published : Dec 17, 2025, 10:22 AM IST

தமிழக அரசு, பெண்கள் மற்றும் திருநங்கையர்கள் சுயதொழில் தொடங்க உதவும் வகையில் ஒரு சிறப்புத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ், தொழில் முனைவோர்களுக்கு ரூ.10 லட்சம் வரை பிணையமில்லா கடனும், ரூ.2 லட்சம் வரை மானியமும் வழங்கப்படுகிறது. 

PREV
14
அரசு தரும் அட்டகாச சலுகை

பெண்கள் சுயதொழில் முனைவோர்களாக வளர வேண்டும் என்பதையே நோக்கமாகக் கொண்டு தமிழக அரசு தொடர்ந்து பல்வேறு முன்னோடி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வரிசையில், தொழில் தொடங்க விரும்பும் பெண்கள் மற்றும் திருநங்கையர்களுக்கு மிகப் பெரிய வாய்ப்பாக, ரூ.10 லட்சம் வரை பிணையமில்லா கடனுதவி மற்றும் ரூ.2 லட்சம் வரை மானியம் வழங்கப்படும் சிறப்பு திட்டம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. குறைந்த முதலீட்டில் தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு இது ஒரு உண்மையான ஜாக்பாட் எனக் கூறலாம்.

24
ரூ.2 லட்சம் வரை மானியம்

இந்த திட்டத்தின் மூலம், 18 முதல் 55 வயது வரை உள்ள பெண்கள் மற்றும் திருநங்கையர்கள் தங்களது சொந்த தொழிலை ஆரம்பிக்க வங்கிகளின் மூலம் கடன் பெறலாம். முக்கியமாக, இந்த கடனுக்கு எந்தவொரு பிணையமும் (Collateral) தேவையில்லை என்பதால், கிராமப்புற மற்றும் நகர்ப்புற பெண்களும் எளிதாக பயன் பெற முடிகிறது. ரூ.10 லட்சம் கடனில், 25 சதவீதம் வரை அரசு மானியமாக வழங்கப்படுகிறது. அதாவது, அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை மானியம் கிடைக்கும். மீதமுள்ள தொகையை மட்டும் வங்கிக் கடனாக திருப்பிச் செலுத்த வேண்டியிருக்கும்.

34
சந்தைப்படுத்தலுக்கும் கவலையில்லை மக்களே

இந்த நிதியுதவி மூலம் உணவு தயாரிப்பு, சிறுதொழில், சேவைத் துறை, உற்பத்தி நிறுவனங்கள், தையல், அழகு நிலையம், மளிகை கடை, ஆன்லைன் வணிகம் போன்ற பல்வேறு தொழில்களை தொடங்க முடியும். மேலும், இந்த திட்டத்தின் கீழ் தொழில் தொடங்குவதற்கான திறன் மேம்பாட்டு பயிற்சி, தொழில் திட்ட அறிக்கை தயாரிப்பு, சந்தைப்படுத்தல் வழிகாட்டுதல் போன்ற கூடுதல் ஆதரவுகளும் வழங்கப்படுகின்றன. இதனால் பெண்கள் தொழிலை தொடங்குவதோடு மட்டுமல்லாமல், அதை வெற்றிகரமாக முன்னெடுத்து செல்லவும் வழி ஏற்படுகிறது.

44
உயர்ந்த வாழ்க்கையை நோக்கி முன்னேற முடியும்

பெண்களின் பொருளாதார சுயநிலையை உயர்த்தும் இந்த திட்டம், குடும்பத்தையும் சமூகத்தையும் முன்னேற்றும் சக்தியாக மாறியுள்ளது. சரியான வழிகாட்டுதல், அரசு மானியம் மற்றும் பிணையமில்லா கடனுதவி ஆகியவை இணைந்து, ஒரு சிறிய கனவையும் பெரிய தொழிலாக மாற்றும் வாய்ப்பை உருவாக்குகின்றன. தொழில் தொடங்க விரும்பும் பெண்கள் இந்த அரிய வாய்ப்பை தவறவிடாமல் பயன்படுத்தினால், தன்னம்பிக்கையுடன் உயர்ந்த வாழ்க்கையை நோக்கி முன்னேற முடியும்.

Read more Photos on
click me!

Recommended Stories