Gold Rate Today (December 17): தங்கம் விலை உயர்வால் வாடிக்கையாளர்கள் ஷாக்! ஒரே நாளில் கிலோவுக்கு ரூ. 11,000 உயர்ந்த வெள்ளி! வரலாறு காணாத உச்சம்!

Published : Dec 17, 2025, 09:53 AM IST

சென்னையில் ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளி விலை மீண்டும் உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தை மாற்றங்கள் மற்றும் டாலர் மதிப்பு ஏற்ற இறக்கமே இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.

PREV
15
மீண்டும் உயரும் தங்கம் வெள்ளி விலை

சென்னையில் ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளி விலையில் இன்று மீண்டும் உயர்வு பதிவாகியுள்ளது. இந்த விலை உயர்வு நடுத்தர மற்றும் ஏழை குடும்ப மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளதுடன், முதலீட்டாளர்களிடையே கலந்த உணர்வுகளை உருவாக்கியுள்ளது.

25
இன்றைய விலை நிலவரம்

இன்றைய நிலவரப்படி, ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 அதிகரித்து ரூ.12,400 ஆக விற்பனை செய்யப்படுகிறது. இதன் காரணமாக ஒரு சவரன் (8 கிராம்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.400 உயர்ந்து ரூ.99,200 ஆக உள்ளது. கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட நிலையில், இன்று மீண்டும் ஏற்பட்டுள்ள இந்த உயர்வு நகை வாங்க திட்டமிட்டிருந்தவர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

35
ஒரே நாளில் கிலோவுக்கு ரூ. 11,000 உயர்ந்த வெள்ளி!

தங்கம் மட்டுமின்றி வெள்ளி விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.11 உயர்ந்து ரூ.222 ஆக உள்ளது. இதன் தொடர்ச்சியாக, 1 கிலோ பார் வெள்ளியின் விலை ரூ.2 லட்சத்து 22 ஆயிரமாக உயர்ந்துள்ளது. வெள்ளி விலை ஒரே நாளில் கிலோவுக்கு ரூ. 11,000 உயர்ந்துள்ளது வரலாறு காணாத உச்சமாகும். குறிப்பாக தொழில், நகை தயாரிப்பு மற்றும் முதலீட்டு நோக்கில் வெள்ளியை பயன்படுத்துபவர்களுக்கு இந்த விலை உயர்வு கூடுதல் சுமையாக மாறியுள்ளது.

45
காரணத்தை தெரிஞ்சுக்கோங்க மக்களே

சர்வதேச சந்தைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், அமெரிக்க டாலரின் மதிப்பில் காணப்படும் ஏற்ற இறக்கம், உலகளாவிய அரசியல் மற்றும் பொருளாதார நிச்சயமற்ற நிலை ஆகியவை தங்கம், வெள்ளி விலை உயர்வுக்கு முக்கிய காரணங்களாகக் கூறப்படுகின்றன. பாதுகாப்பான முதலீடாக தங்கம் கருதப்படுவதால், உலக முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்கியதும் விலை உயர்வுக்கு காரணமாக உள்ளது. 

55
பெரிய சரிவு ஏற்படும் வாய்ப்பு குறைவு

வரும் நாட்களிலும் தங்கம், வெள்ளி விலையில் பெரிய சரிவு ஏற்படும் வாய்ப்பு குறைவு என சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஆகவே நகை வாங்க திட்டமிடுபவர்கள் விலை நிலவரத்தை கவனித்து முடிவெடுக்க வேண்டும் என்றும், முதலீட்டாளர்கள் அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது என்றும் பொருளாதார வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர்.

Read more Photos on
click me!

Recommended Stories