பணம் சம்பாதிப்பதை விட, அதை சரியாக நிர்வகிப்பதே முக்கியம். சில தவறுகளைத் திருத்தி, சரியான திட்டமிடலுடன் செயல்பட்டால், கடனிலிருந்து மீண்டு செல்வந்தராக உயர முடியும்.
பணம் சம்பாதிப்பது மட்டுமே செல்வந்தராக மாறுவதற்கான வழி அல்ல. அதை எப்படிப் பயன்படுத்துகிறோம், எப்படிச் சேமிக்கிறோம், எப்படித் திட்டமிடுகிறோம் என்பதே நம்மை கடனாளியா? முதலாளியா? என்பதைக் தீர்மானிக்கிறது. உலகப் புகழ் பெற்ற விளையாட்டு வீரர்களே தவறான நிதி மேலாண்மையால் திவாலானார்கள் என்றால், சாதாரண மக்களுக்கு நிதித் தவறுகள் நேர்வது இயல்பே. ஆனால் அந்தத் தவறுகளை சரியான நேரத்தில் திருத்திக் கொண்டால், எவ்வளவு பெரிய கடனாக இருந்தாலும் அதிலிருந்து மீண்டு முன்னேற முடியும்.
28
செலவுக்குப் பிறகு சேமிப்பு – தவறான பழக்கம்
செலவு போக மீதமிருப்பதை சேமிக்கலாம் என்ற எண்ணமே பலரை கடனாளிகளாக்குகிறது.முதலில் சேமிப்பு – பின்னர் செலவு என்ற விதியைப் பின்பற்றுங்கள். முதலீட்டை இளம் வயதில் தொடங்கினால், கூட்டு வட்டி உங்களை முதலாளியாக மாற்றும்.
38
அவசரகால நிதி இல்லாதது – கடனின் முதல் வாசல்
மருத்துவச் செலவு, வேலை இழப்பு போன்ற எதிர்பாராத சூழ்நிலைகளில் அவசரகால நிதி இல்லாவிட்டால், கடன் தவிர்க்க முடியாததாகிவிடும். குறைந்தது 6 மாத குடும்பச் செலவுக்கு சமமான தொகையை அவசரகால நிதியாக வைத்துக் கொள்ளுங்கள். ரொக்கம், சேமிப்பு கணக்கு, லிக்விட் மியூச்சுவல் ஃபண்ட் போன்ற எளிதில் பணமாக்கக்கூடிய இடங்களில் இதை வைத்திருப்பது புத்திசாலித்தனம்.
பிறர் பாராட்ட வேண்டும் என்பதற்காக வாங்கும் பொருட்களே பல நேரங்களில் கடனுக்குக் காரணமாகின்றன. இன்று தேவையில்லாததை வாங்கினால், நாளை தேவையானதை விற்க வேண்டிய நிலை வரும், வாரன் பஃபெட்டின் இந்த வார்த்தையை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.
58
போதிய காப்பீடு இல்லாதது – குடும்பத்துக்கு ஆபத்து
வருமானம் ஈட்டும் நபருக்கு ஏதேனும் நேர்ந்தால், முழுக் குடும்பமும் கடனில் சிக்க வாய்ப்பு உள்ளது. ஆண்டு வருமானத்தின் 15 மடங்கு அளவுக்கு டேர்ம் லைஃப் இன்ஷூரன்ஸ், குடும்பம் முழுவதற்கும் போதுமான மருத்துவக் காப்பீடு, இவை கட்டாயம்.
68
நிதி அறிவு குறைவு – தவறான முதலீடுகள்
நிதி அறிவு இல்லாமல் செய்யும் முதலீடு லாபத்தை மட்டுமல்ல, முதலையும் இழக்கச் செய்யும். நிதி மேலாண்மை குறித்து தொடர்ந்து கற்றுக்கொள்ளுங்கள். அறிவே உங்கள் உண்மையான முதலீடு.
78
அதிக கிரெடிட் கார்டு பயன்பாடு – வட்டி வலையில் சிக்கல்
கிரெடிட் கார்டு தொகையை தாமதமாகச் செலுத்தினால், ஆண்டுக்கு 40–45% வரை வட்டி கட்ட வேண்டி வரும்.கிரெடிட் கார்டை அவசியத்திற்கு மட்டும் பயன்படுத்துங்கள், முழுத் தொகையையும் நேரத்தில் செலுத்துங்கள்.
88
முதலாளியாக மாற்றும் உண்மையான சீக்ரெட்
இந்த 6 தவறுகளைத் திருத்தி, சரியான நிதித் திட்டமிடலுடன் செயல்பட்டால், கடன் குறையும், சேமிப்பு உயரும், செல்வம் பெருகும். கோடி ரூபாய் கடன் இருந்தாலும் கவலை வேண்டாம். சரியான பணப் பழக்கங்களே உங்களை கடனாளியிலிருந்து முதலாளியாக மாற்றும் உண்மையான சீக்ரெட்!