Training: வேலைக்கு போக வேண்டாம்! வீட்டிலிருந்தே ரூ.30,000 சம்பாதிக்க இலவச தையற்கலை பயிற்சி! எங்கு நடக்குது தெரியுமா?

Published : Dec 16, 2025, 10:53 AM IST

ஈரோடு கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையம், பெண்களுக்காக 31 நாட்கள் இலவச தையற்கலை பயிற்சியை வழங்குகிறது. இப்பயிற்சியில் உணவு, சீருடை இலவசமாக வழங்கப்பட்டு, முடிவில் அரசு அங்கீகாரம் பெற்ற சான்றிதழ் வழங்கப்படும்.

PREV
15
இலவச தையற்கலை பயிற்சி

இன்றைய காலகட்டத்தில் பெண்கள் குடும்பத்தையும் வேலைவாய்ப்பையும் சமநிலைப்படுத்திக் கொண்டு பொருளாதார ரீதியாக தன்னிறைவு அடைய வேண்டும் என்ற எண்ணம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கிராமப்புற மற்றும் நடுத்தர குடும்பப் பெண்களுக்கு, வீட்டை விட்டு வெளியே செல்லாமல் வருமானம் ஈட்டும் வாய்ப்புகள் மிக அவசியமாக உள்ளன. அத்தகைய சூழலில், குறைந்த முதலீட்டில், வீட்டிலிருந்தே சுயதொழில் தொடங்கி நிலையான வருமானம் பெற உதவும் தையற்கலை போன்ற திறன் பயிற்சிகள் பெண்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை உருவாக்குகின்றன. இந்த தேவையை கருத்தில் கொண்டு, கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் பெண்களுக்காக நடத்தும் இலவச தையற்கலை பயிற்சி, பொருளாதார முன்னேற்றத்திற்கான ஒரு பொன்னான வாய்ப்பாக அமைந்துள்ளது.

25
1 மாதம் இலவச பயற்சி

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் (RSETI) சார்பில் பெண்களுக்கான ஒரு சிறப்பான இலவச தையற்கலை (டெய்லரிங்) பயிற்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு தேடும் பெண்கள், குடும்ப வருமானத்தை உயர்த்த நினைக்கும் இல்லத்தரசிகள் மற்றும் சுயதொழில் தொடங்க விரும்புபவர்களுக்கு இந்தப் பயிற்சி மிகப்பெரிய வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. வரும் 20-12-2025 முதல் 31-01-2026 வரை, மொத்தம் 31 நாட்கள் இந்தப் பயிற்சி நடைபெற உள்ளது.

35
சுயதொழில் தொடங்குவதற்கு உதவியாக இருக்கும்

இந்த பயிற்சியின் முக்கிய சிறப்பு என்னவென்றால், பயிற்சி கட்டணம், சீருடை, உணவு அனைத்தும் முழுமையாக இலவசம் என்பதுதான். பொருளாதார சுமை இல்லாமல், பெண்கள் தன்னம்பிக்கையுடன் பயிற்சியில் கலந்து கொள்ள முடியும். மேலும், பயிற்சி முடிவில் அரசு அங்கீகாரம் பெற்ற சான்றிதழ் வழங்கப்படுவது, எதிர்காலத்தில் வேலைவாய்ப்பு அல்லது சுயதொழில் தொடங்குவதற்கு பெரிதும் உதவியாக இருக்கும்.

45
ரூ.30,000 வரை வருமானம்

இந்த தையற்கலை பயிற்சியில், அடிப்படை முதல் மேம்பட்ட அளவிலான டெய்லரிங் திறன்கள் வரை கற்றுத்தரப்பட உள்ளன. பெண்கள் உடைகள், பிளவுஸ், சுடிதார், யூனிஃபாரம், ஆல்டரேஷன் போன்ற வேலைகளை முறையாக செய்யும் பயிற்சி வழங்கப்படும். இதன் மூலம், பயிற்சி முடித்தவர்கள் வீட்டிலிருந்தே டெய்லரிங் தொழிலை தொடங்கி, மாதத்திற்கு ரூ.20,000 முதல் ரூ.30,000 வரை வருமானம் ஈட்டும் நிலைக்கு உயர முடியும்.

55
தொடர்புகொள்ளுங்கள் விவரம் கிடைக்கும்

இந்த பயிற்சியில் 18 முதல் 45 வயதுக்குட்பட்ட, வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்பவர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொள்ளலாம். பெண்களின் பொருளாதார முன்னேற்றத்தையும், சுயதொழில் வாய்ப்பையும் ஊக்குவிப்பதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். ஆர்வமுள்ளவர்கள் தாமதிக்காமல் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.

பயிற்சியில் சேர விரும்புவோர் கூடுதல் தகவல்களுக்கும் முன்பதிவிற்கும் கீழ்கண்ட எண்களில் தொடர்பு கொள்ளலாம்: 87783 23213, 72006 50604, 0424-2400338

வீட்டிலிருந்தே வேலை செய்து குடும்ப வருமானத்தை உயர்த்த வேண்டும் என்று நினைக்கும் பெண்களுக்கு, இந்த இலவச தையற்கலை பயிற்சி ஒரு அரிய வாய்ப்பாகும். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, தன்னம்பிக்கையுடன் வாழ்க்கையில் முன்னேற அனைவரும் பயன் அடையலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories