கடன் வாங்கியவர்களுக்கு ஆர்பிஐ தரப்போகும் குட் நியூஸ்.. லோன் EMI குறையப்போகுது தெரியுமா.?

Published : Nov 25, 2025, 08:29 AM IST

பணவீக்கம் குறைந்து வருவதும், சாதகமான பொருளாதார தரவுகளும் இந்த சாத்தியத்தை ஆதரிக்கின்றன. மேலும், ரூபாயின் சமீபத்திய சரிவு இயல்பானது என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா குறிப்பிட்டுள்ளார். 

PREV
13
ஆர்பிஐ வட்டி குறைப்பு

ஒரு செய்தியாளர் சந்திப்பில், இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா டிசம்பர் மாத வட்டி விகிதம் குறைய வாய்ப்பு இருப்பதாக மேற்கோள் காட்டியுள்ளார். அவர் எவ்வளவு அளவு குறைப்பு எனத் தெளிவாகக் கூறவில்லை. ஆனால், இந்த ஆண்டின் முதல் பாதியில் ஆர்பிஐ ஏற்கனவே 1% வட்டி குறைக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாத வட்டி மாற்றத்தை நிறுத்தியது வைத்துள்ளது.

23
ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா

ஒரு தனியார் தொலைக்காட்சி நேர்காணலில், ரிசர்வ் வங்கி ஆளுநர் மல்ஹோத்ரா, மேலும் வட்டி குறைக்க இடம் இருப்பதாக தெரிவித்தார். அக்டோபர் மாத MPC கூட்டத்தில் கூட வட்டி குறைக்க வாய்ப்பு இருப்பதாக குறிப்பிட்டிருந்ததை அவர் நினைவுபடுத்தினார். "அதற்குப் பிறகு கிடைத்துள்ள பொருளாதார தரவுகளும் வட்டி குறைப்புக்கான வாய்ப்பை குறைக்கவில்லை. முடிவு MPC கூட்டத்தில் எடுக்கப்படும்," என்று கூறினார். இந்தியாவில் பணவீக்கம் குறைந்து வரும் நிலையில், டிசம்பரில் வட்டி குறைப்பு சாத்தியம் அதிகம் என்று பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.

33
ஆர்பிஐ

சமீபத்தில் ரூபாய் மதிப்பு குறைந்தது இயல்பானது என்றும், அதிக அதிர்வுகளை ரிசர்வ் வங்கி தலையிடுவதாகவும் அவர் விளக்கம் அளித்தார். வருடத்துக்கு 3%–3.5% மதிப்பிழப்பு இந்திய ரூபாய்க்கு சாதாரண வரலாற்றுத் தன்மை என்றும் கூறினார். தற்போது ரூபாய் 89.49 என்ற சாதனை சரிவை எட்டியுள்ளது. வர்த்தக பதட்டம் மற்றும் வெளிநாட்டு முதலீட்டுக் காளிப்போக்கால் ரூபாய் இவ்வாண்டு மட்டும் 4% மதிப்பு இழந்துள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories