3 காப்பீட்டு நிறுவனங்கள் இணையப்போகிறது.. மத்திய அரசு சொல்லப்போகும் குட் நியூஸ்.!!

Published : Nov 24, 2025, 10:51 AM IST

இந்தியாவில் பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களை ஒருங்கிணைக்கும் திட்டம் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இதனுடன், காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை 100% ஆக உயர்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

PREV
13
3 காப்பீட்டு நிறுவனங்கள் இணைப்பு

இந்தியாவில் பொதுத்துறைக்கு சொந்தமான காப்பீட்டு நிறுவனங்களை ஒருங்கிணைக்கும் நடவடிக்கை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்து இந்த திட்டத்தை மத்திய நிதி அமைச்சகம் மறுபடியும் செயலில் கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் அரசு துறையில் செயல்படும் காப்பீட்டு நிறுவனங்களின் வலிமையை ஒருங்கிணைத்து, ஒரு பெரிய சர்வதேச தரமான நிறுவனமாக மாற்றும் முயற்சி நடைபெறுகிறது. இந்த இணைப்பு, சில ஆண்டுகளுக்கு முன்பு வங்கித் துறையில் நடந்த இணைப்பு போன்றே இருக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர். அப்போது பல சிறிய வங்கிகள் இணைக்கப்பட்டு, பெரிய மற்றும் போட்டித்திறன் கொண்ட வங்கிகள் உருவாக்கப்பட்டன.

23
காப்பீட்டு துறையில் பெரிய மாற்றம்

மேலும், காப்பீட்டு துறையிலும் மூன்று நிறுவனங்களை ஒன்றாக இணைப்பதன் மூலம், நிர்வாக செலவுகள் குறைந்து செயல்திறன் அதிகரிக்கும் என அரசு நம்புகிறது. இந்த யோசனையை முதன்முதலில் 2018-19 நிதியாண்டில் அப்போதைய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி முன்மொழிந்தார். ஓரியண்டல் இன்சூரன்ஸ், நேஷனல் இன்சூரன்ஸ் மற்றும் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் ஆகிய மூன்று நிறுவனங்களையும் இணைக்கிறது திட்டமிடப்பட்டது. ஆனால் அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்த நிறுவனங்கள் ரூ.17,450 கோடி இழப்பை சந்தித்ததால் இடைநிறுத்தப்பட்டது.

33
மத்திய நிதி அமைச்சகம்

2020க்குப் பிறகு சூழல் மாற்றியதால் அரசு திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தியது. தற்போது இந்த மூன்று நிறுவனங்களும் லாபநிலையை நோக்கி நகர்வது மற்றும் செயல்திறன் உயர்வது, இணைப்பு திட்டம் மீண்டும் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளது காரணமாக உள்ளது. இதனுடன், காப்பீட்டு துறையில் அந்நிய நேரடி முதலீட்டு (FDI) வரம்பை தற்போது உள்ள 74% இலிருந்து 100% ஆக உயர்த்த அரசாங்கம் தயாராகி வருகிறது. இந்த மசோதா வரும் டிசம்பர் 1-ஆம் தேதி தொடங்கும் குளிர்கால நாடாளுமன்ற கூட்டத் தொடரில் முன்வைக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories