ATM Shutdown: நாடு முழுவதும் ஏடிஎம்கள் மூடப்படுமா? கிராமங்கள், சிறிய நகரங்களுக்கு வந்த சிக்கல்

Published : Jun 10, 2026, 05:16 PM IST

ATM Shutdown: "ஏடிஎம்-ல் பணம் எடுக்க முடியாத நிலை வருமா?" என்ற அச்சம் மக்களிடையே எழுந்துள்ளது. ஜூன் 20-க்குள் தீர்வு காணப்படாவிட்டால், சிறிய நகரங்களில் செயல்படும் ஏடிஎம் சேவைகள் பாதிக்கப்படலாம் எனத் துறை அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

PREV
15
நாடு முழுவதும் ஏடிஎம் சேவைக்கு ஆபத்தா?

நாடு முழுவதும் உள்ள ஏடிஎம்கள் மூடப்பட உள்ளன என்ற தகவல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. ஆனால், உண்மையில் இந்தப் பிரச்சினை அனைத்து ஏடிஎம்களையும் பாதிப்பதில்லை. சிறிய நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் செயல்படும் சில ஏடிஎம் மையங்களே தற்போது கடுமையான நிதி மற்றும் செயல்பாட்டுச் சவால்களை எதிர்கொண்டு வருகின்றன.

25
இந்திய அரசின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியின் மீது குற்றச்சாட்டு

இந்திய ஏடிஎம் துறைகளின் கூட்டமைப்பு, நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியின் மீது முக்கிய குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. பெருநகரங்களில் உள்ள ஏடிஎம்-களுக்கு அதிக பணம் அனுப்பப்படுவதால், இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்கள், கிராமப்புறங்களில் உள்ள ஏடிஎம்-களுக்கு பண விநியோகம் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

35
அதிகரித்து வரும் இழப்புகள்

ஏடிஎம் இயந்திரங்கள் செயல்படாத சூழலில், அவற்றை நிர்வகிக்கும் நிறுவனங்கள் பரிவர்த்தனை கட்டணம் மற்றும் சேவைக் கட்டண வருவாய் இழக்கின்றன. இந்த நெருக்கடியால் ஏடிஎம் துறைக்கு நூறு கோடி ரூபாய்க்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த இழப்புக்கான நிவாரணத் தொகையையும் வங்கித் துறையிடம் அந்த அமைப்பு கோரியுள்ளது.

45
குறையும் பயன்பாடு... உயர்ந்து வரும் செலவுகள்

ஒருபுறம் மின்னணு பணப் பரிவர்த்தனைகளின் பயன்பாடு அதிகரித்து வருவதால் ஏடிஎம் பயன்பாடு தொடர்ந்து குறைந்து வருகிறது. மறுபுறம், குறைந்தபட்ச ஊதிய உயர்வு, எரிபொருள் விலை உயர்வு மற்றும் பராமரிப்புச் செலவுகள் அதிகரித்துள்ளன. இதன் காரணமாக ஏடிஎம் சேவை நிறுவனங்களின் வருவாய் மற்றும் இலாபம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

55
அடுத்து என்ன நடக்கலாம்?

ஜூன் 20-ஆம் தேதிக்குள் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணப்படாவிட்டால், சிறிய நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள பல ஏடிஎம்கள் தற்காலிகமாக மூடப்படலாம் என இந்திய ஏடிஎம் துறைகளின் கூட்டமைப்பு எச்சரித்துள்ளது. இருப்பினும், நாடு முழுவதும் ஏடிஎம் சேவை நிறுத்தப்படாது என்பது கவனிக்கத்தக்கது. இந்த விவகாரத்தில் இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் சம்பந்தப்பட்ட வங்கிகள் எடுக்கும் அடுத்தகட்ட நடவடிக்கைகளே முக்கியத்துவம் பெறுகின்றன.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories