ஒரே ஒரு ரூ. 5 நாணயத்தை உருக்கி ஆறு கத்திகளை உருவாக்கலாம். ஒவ்வொரு கத்தியும் ரூ. 2 ரூபாய்க்கு விற்கப்படுவதால் ஒரு 5 ரூபாய் நாணயத்தை உருக்கி கத்தி செய்து விற்பனை செய்வதன் மூலம் ரூ.12 சம்பாதிக்க முடியும். இந்த வியாபாரம் லாபகரமாக இருப்பதால் இந்தியாவில் இருந்து அதிக அளவில் நாணயங்கள் கடத்தப்படுகின்றன.
இந்த விஷயத்தை ரிசர்வ் வங்கியின் கவனத்திற்கு சென்ற நிலையில், இதுகுறித்து ரிசர்வ் வங்கி முக்கிய முடிவை எடுத்தது. அதன்படி பழைய 5 ரூபாய் நாணயங்களை அச்சிடும் பணி நிறுத்தப்பட்டு, புதிய நாணயங்கள் அச்சடிக்கப்பட்டன.