Old one rupee coins
பழைய பொருட்கள் மட்டுமல்ல, பழைய காசுகள், பழைய கரன்சி நோட்டுகள் பல கோடிகளைச் சம்பாதிக்க உதவும். பழங்காலப் பொருட்களுக்கு அவ்வளவு கிராக்கி இருக்கிறது. அவற்றைப் பத்திரமாக வைத்திருந்தால் நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம்.
One rupee coin
நீங்கள் கஷ்டப்பட்டு எதுவும் செய்ய வேண்டியதில்லை. வீட்டில் உட்கார்ந்து கொண்டே உங்களிடம் உள்ள பழைய நாணயத்தை புகைப்படம் எடுத்து அப்லோட் செய்ய வேண்டும். அது பழைய 1 ரூபாய் நாணயமாக இருந்தாலும், அதன் மூலம் பத்து கோடி ரூபாய்கூட கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.
British period 1 rupee coin
உங்களிடம் உள்ள பழைய கரன்சி நோட்டு அல்லது நாணயத்தில் குறிப்பிட்ட விவரக்குறிப்புகள் இருக்கிறதா என்று பார்த்தால் போதும். உதாரணமாக, ஆங்கிலேயர் காலத்தில் 1885ஆம் ஆண்டில் அச்சடிக்கப்பட்ட நாணயம் உங்களிடம் இருந்தால் பத்து கோடி ரூபாய் கிடைக்கும். இந்த நாணயம் உங்களிடம் இருந்தால் ஆன்லைன் ஏலத்தில் அதை விற்க முயற்சி செய்யலாம்.
Indiamart
இதுபோன்ற பழைய நாணயம் பத்து கோடி ரூபாய்க்கும் விற்கப்பட்டிருக்கிறது. இந்தியா மார்ட் இணையதளத்தைப் (www.indiamart.com) பார்வையிடலாம். அதில் உங்கள் பழைய நாணயத்தை புகைப்படம் எடுத்து பதிவிடலாம். உங்கள் விளம்பரத்தைக் பார்க்கும் ஆர்வமுள்ள நாணய சேகரிப்பாளர்கள் உங்களைத் தொடர்புகொள்வார்கள்.
Coinbazaar
Coinbazaar போன்ற இணையதளங்களும் பழைய மற்றும் அரிய நாணயங்களை விற்பனை செய்கின்றன. அதிலும் பழைய ரூபாய் நோட்டுகள், நாணயம் போன்ற அரிய பொருட்களை விற்பனை செய்து லட்சங்களில், கோடிகளில் பணம் சம்பாதிக்கலாம். நீங்கள் பதிவிடும் போட்டோ மற்றும் விவரங்களைப் பார்த்து ஆர்வமுள்ளவர்கள் உங்களைத் தொடர்பு கொண்டு அதிக விலை கொடுத்து வாங்கிக்கொள்ளத் தயாராக இருக்கிறார்கள்.
RBI
ஆனால் பழைய நோட்டுகள் அல்லது நாணயங்களை ஆன்லைனில் வர்த்தகம் செய்வதற்கு எதிராக இந்திய ரிசர்வ் வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. ரிசர்வ் வங்கியின் பெயர் மற்றும் சின்னத்தை பயன்படுத்தி சிலர் கமிசன், கட்டணங்கள் மற்றும் வரிகளை வசூலித்து மோசடி செய்து வருவது தெரியவந்துள்ளது. அத்தகைய பரிவர்த்தனைகளுக்கு ஒருபோதும் ஆர்பிஐ கமிஷன் அல்லது வரி வசூலிப்பதில்லை என ரிசர்வ் வங்கி தெளிவுபடுத்தியுள்ளது.